வெள்ளி, 24 ஏப்ரல், 2015

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை!
------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------------
கணித மேதை சகுந்தலா தேவி கம்ப்யூட்டர்களைத் 
தோற்கடித்த கணிதப் புலி. உலகம் முழுவதும் பறந்து 
சென்று தன்  திறமைகளை நிரூபித்து, நம் நாட்டுக்குப் 
புகழ் சேர்த்தவர். என்றாலும் இந்திய அரசு அவரை எந்த 
விதத்திலும் கௌரவிக்கவில்லை.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பாரத் ரத்னா போன்ற விருதுகளுக்கு 
அவர் நிச்சயம் தகுதியானவர். ஆனாலும் இந்திய அரசு 
அவருக்கு எந்த விருதையும் வழங்கவில்லை.

1) பிலிப்பைன்ஸ் பல்கலைக் கழகம் 1969இல் அவருக்கு 
தங்கப் பதக்கமும் "ஆண்டின் சிறந்த பெண்மணி" விருதையும் 
வழங்கி கௌரவித்தது.  
2) 1988இல் வாஷிங்டன்னில், "ராமானுஜன் கணிதமேதை
விருது" அவருக்கு வழங்கப் பட்டது. (ராமானுஜன் பெயரில் 
இந்தியாவில் விருது கிடையாது. அமெரிக்கா, ராமானுஜன்
பெயரில் விருது வழங்குகிறது)
3) கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அவரின் சாதனை 
பொறிக்கப் பட்டுள்ளது.

அவர் மறைவுக்கு முன்னதாகத்தான் மராட்டிய அரசு 
அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.
எனினும், இது அவரின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்
போது, மிகவும் குறைவான அங்கீகாரமே.

இந்திய அரசு என்ன செய்தது? ஏதேனும் விருதை 
வழங்கியதா? இல்லை. இந்த நாடு உருப்படுமா?

இவ்வளவுக்கும் சகுந்தலா தேவி பார்ப்பன வகுப்பைச் 
சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் அரசாங்கத்தால் 
துளி அளவும் கௌரவிக்கப் படவில்லை. தம் வாழ்நாளின் 
கடைசிக் காலத்தில், அவர் நிதிப் பற்றாக்குறையால் அவதிப் 
பட்டார். இந்திய அரசு என்ற கழுதைக்கு, சகுந்தலா தேவி 
போன்ற கற்பூரத்தின் வாசனை ஒருநாளும் தெரியப் 
போவதில்லை.

     
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக