வெள்ளி, 24 ஏப்ரல், 2015

ஐன்ஸ்டினுக்கு இழுக்குத் தேடும் சுட்டி விகடன்
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
சுட்டி விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது. ஐன்ஸ்டினை
விஞ்சிய சகுந்தலா என்ற கட்டுரை. மூன்று மணி நேரமாக
ஒரு கணக்கிற்கு விடை காண முடியாமல் ஐன்ஸ்டின் திணறினார்
என்றும், அதே கணக்கை சகுந்தலா சுலபத்தில் விடை கண்டு
விட்டார் என்றும் கட்டுரை கூறுகிறது. ஆனால் அந்தக் கணக்கு
என்ன என்று சொல்லவில்லை.
**
இணையம் வந்தவுடன் அறிவாளிகள் போல் நடிக்கும்
போலிகள் பெருகி விட்டார்கள். கணிதமோ அறிவியலோ
படிக்காமல், விக்கி பீடியாவில் இருந்து எதையோ காப்பி
அடித்துக் கட்டுரை தயாரிக்கும் கீழ்மை கொடிகட்டிப்
பறக்கிறது. எனவே சுட்டி விகடனுக்குப் பின்வரும்
கடிதத்தை அனுப்பி உள்ளோம். பதில் வந்தால் சரி.
************************************************************** 
நாம் அனுப்பிய கடிதம்
----------------------------------------
ஐன்ஸ்டின் திணறிப் போனதும் சகுந்தலாதேவி சுலபத்தில்
தீர்த்ததுமான அந்தக் கணக்கு தான் என்ன? ஐன்ஸ்டினை
விஞ்சிய சகுந்தலா என்று கட்டுரைக்குத் தலைப்புக்
கொடுக்கும்போது, அவர் எப்படி ஐன்ஸ்டினை விஞ்சினார்
என்பது சொல்லப் பட வேண்டும் அல்லவா! அதுதானே சரி!
அதுதானே எழுத்து நேர்மை!
**
சகுந்தலாதேவி arithmetic, algebra, number theory ஆகிய கணிதத்
துறைகளில் பெரும் நிபுணர். ஐன்ஸ்டினின் புலமே வேறு.
எனவே, மேற்படி கணக்கு என்ன என்று தெரிவிக்கவும்.
குறைந்த பட்சமாக அந்தக் கணக்கு கணிதத்தின் எந்தத் துறை
சார்ந்தது, (அதாவது கால்குலசா வெக்டார் அல்ஜிப்ராவா என்பது
போல)  என்பதையாவது விளக்க வேண்டும்.
பி இளங்கோ சுப்பிரமணியன்,
நியூட்டன் அறிவியல் மன்றம்
சென்னை.
********************************************************************
சுட்டி விகடன் எழுதிய கட்டுரை குறித்த விவரங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------Chutti Vikatan with Pasumalai Mech Thamizh
ஏப்ரல் 21: கணித மேதை சகுந்தலா தேவி நினைவு தின சிறப்பு பகிர்வு
ஐன்ஸ்டீனை விஞ்சிய சகுந்தலா!
-----------------------------------------------------------------------------------------------------------
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்குக்கான விடையைச் சகுந்தலா தேவி மிகச் சில நொடிகளில் ஐன்ஸ்டீன் முன்னிலையிலேயே தீர்த்தார். அசந்து போய் அவரைப்பாரட்டினார் ஐன்ஸ்டீன் 
--------------------------------------------------------------------------------------------------------------------------
பூ.கொ.சரவணன் என்பவர் இக்கட்டுரையை "எழுதி" உள்ளார்.
****************************************************************************************************************************
**************************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக