வெள்ளி, 24 ஏப்ரல், 2015

சைவத் திருமுறைகள் மொத்தம் பன்னிரண்டு. அதாவது,
தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சமயப் பாடல்கள்
பதினெட்டாயிரம் ஆகும். இது போலவே வைணவ சமயப்
பாடல்கள் நாலாயிரம் திவ்யப் பிரபந்தம் என்று அழைக்கப் படும்.
இதில் நாலாயிரம் பாடல்கள் உண்டு. ஆக மொத்தத்தில்,
18000+4000=22000 என்பதாக இருபத்திரண்டு ஆயிரம் பாடல்கள்
உள்ளன. இவை போக கம்ப ராமாயணம் உள்ளது. இன்னும்
பல உள்ளன. எனினும், இந்த பாஜக-இந்து அமைப்பு-ஆர்.எஸ்.எஸ்
ஆசாமிகளில் எவர் ஒருவரேனும் பத்துப் பாடல்களை
(வெறும் 10 பாடல்களை) பொருள் உணர்ந்து சொல்ல முடியுமா
என்றால், முடியாது என்பதே உண்மை. இவர்களின்  கல்வி-படிப்பு
என்பதெல்லாம் மிக மிகக் குறைவே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக