புதன், 22 ஏப்ரல், 2015

1) அஃது பார்ப்பனர்களையே குறிக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
அதற்கு முந்திய பாடல்களையும் கருத வேண்டும்.
2) தமிழ் இலக்கணத்தில் பொருள்கோள் என்று ஒன்று உண்டு.
யாற்றுநீர்ப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள்கோள்,
பூட்டுவில் பொருள்கோள் என்றெல்லாம் உண்டு என்பதைத்
தாங்களும் அறிந்து இருக்கக் கூடும்.
3) இது ஒரு இலக்கிய விவாதம். இதில் குயுக்தியான கேள்விகளுக்கு
இடம் இல்லை. நாம் இங்கே, நீதிமன்றத்தில் ஒரு கிரிமினல்
வழக்கில் வாதிடுவது போல் வாதிடத் தேவையில்லை.
4) "நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி"    
என்ற பாடலில் வரும் நாலாறு மாதம் என்ற தொடருக்கு
இருபத்திநாலு மாதம் என்று பொருள் கொள்ள முனைவது
பொருள்கோள் அல்ல.
5) தாங்கள் வைணவராக இருக்கக் கூடும். எனினும்
சைவத் திருமுறைகளைப் படிப்பதில் தவறே இல்லை.
எனவே திருமந்திரம் முழுவதையும் தாங்கள் படியுங்கள்
என்று அன்புடன் வேண்டுகிறேன். அதைப் படிக்கும்
ஆற்றல் தங்களுக்கு உண்டு என்றும் நான் கருதுகிறேன்.
-------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக