திங்கள், 13 ஏப்ரல், 2015

மாட்டு இறைச்சியே 
ராமனுக்கும் சீதைக்கும் பிடித்தமான உணவு!
ராஜாஜி ஒப்புதல்!
--------------------------------------------------------------------------
வனவாசத்தின்போது, ராம லட்சுமணர்களும் 
சீதாப் பிராட்டியும் சித்திரகூடமலையை 
அடைகிறார்கள். அங்கு குடில் அமைத்துத் 
தங்குகிறார்கள். வேட்டையாடி மிருகங்களைக் கொன்று 
அவற்றின் இறைச்சியை உண்ணுகிறார்கள்.
**
கடவுள் ராமன் இறைச்சி உண்டதாக எழுதலாமா 
என்று சிலர் கொதிக்கலாம். ஆனால் அதுதான் உண்மை 
என்று அடித்துக் கூறுகிறார் சிறந்த ராம பக்தரான 
மூதறிஞர் ராஜாஜி. இதோ, ராஜாஜி கூறுகிறார்!
**
"இவ்விடத்திலும் இன்னும் பல இடங்களிலும் 
ராம லட்சுமணர்கள் வேட்டையாடி, பூஜைக்குத் தகுந்த,
அதாவது வழக்கப்படி சாப்பிடத் தகுந்த, வேட்டை ஆகாரம் 
சம்பாதித்து உண்டார்கள் என்று வால்மீகி முனிவர் 
பாடி இருக்கிறார். சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் 
வியக்தமாகப் பாடி இருக்கிறார். இதைப்பற்றி நாம் 
குழப்பம் அடைய வேண்டியதில்லை. சத்திரியர்களின் 
ஆசாரப்படி, மாமிச ஆகாரத்தில் குற்றமில்லை."
**
ஆதாரம்: இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்),
ராஜாஜி எழுதிய நூல், வானதி பதிப்பகம் வெளியீடு,
இருபத்தி ஐந்தாம் பதிப்பு, ஜனவரி 2000,
அத்தியாயம்-28, தலைப்பு: சித்திரகூடம், பக்கம்-155.
இது சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல்.
**
சத்திரியனான ராமன் மாமிச ஆகாரம் உண்டான் என்பதில் 
குற்றம் இல்லை. இதில் சந்தேகத்துக்கு இடம் இல்லை.
யாரும் குழப்பம் அடைய வேண்டியது இல்லை. இவ்வாறு 
ஆணித்தரமாகக் கூறி உள்ளார் ராஜாஜி.
**
வாருங்கள்! மாட்டு இறைச்சி படைத்து,
ராமனை வணங்குவோம்! ராஜாஜி வாழ்க!!
********************************************************************  
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக