புதன், 22 ஏப்ரல், 2015

பூணூல் அறுப்பு நியாயமே!
குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை!
--------------------------------------------------------------------------- 
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------------------------------
மகாத்மா காந்தி இருக்கும்வரை இந்துக்களுக்கு 
விமோசனம் இல்லை எனவே காந்தியைக் கொன்று 
விட வேண்டும் என்று தீர்மானித்த கோட்சே, அதைச் 
செய்து முடித்தார். காந்தியைக் கொன்ற தன்னைச் 
சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று நன்கு தெரிந்துதான் 
கோட்சே அதைச் செய்தார். அவர் சாவுக்கு அஞ்சவில்லை.
**
அது போலவே பூணூலை அறுத்தால் சிறைக்குப் போக 
வேண்டும், தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே 
இந்த இளைஞர்கள் பூணூலை அறுத்துள்ளனர். அவர்கள் 
சிறை செல்ல அஞ்சவில்லை. தாமே முன்வந்து காவல்
துறையிடம்  சரண் அடைந்துள்ளனர்.
**
இந்த இரு நிகழ்வுகளிலும் குற்றங்களைச் செய்தவர்கள் 
தனிப்பட்ட பகைமையால் செய்யவில்லை. ஒரு கருத்தால்
ஈர்க்கப் பட்டே செய்துள்ளனர். அவரவர் நியாயம் அவர்களுக்கு.
**
மயிலாப்பூர் விசுவநாத குருக்களுக்கும், அவருடைய 
பூணூலை அறுத்த இளைஞர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் 
தகராறோ, சொத்துத் தகராறோ இல்லை. இருதரப்பினருக்கும் 
இடையில் முன்விரோதம் ஏதும் இல்லை. பூணூல் என்பது 
சமத்துவத்துக்கு எதிரானது என்று தெளிந்த அந்த இளைஞர்கள்
பூணூலை அறுத்து உள்ளனர். இது தவறு என்று ஒத்துக் 
கொண்டால், பூணூல் அணிவது நியாயம் என்று ஆகி விடும்.
**
எனவே, இளைஞர்கள் பூணூலை அறுத்து விட்டார்களே 
என்று யாரும் குற்ற உணர்வு கொள்ள வேண்டியது இல்லை.
இது குற்றச் செயல் அல்ல. இது அரசியல் போராட்டத்தின் 
ஒரு வெளிப்பாடு. இந்தப் போராட்டம் தப்பு என்றால்,
பார்ப்பன எதிர்ப்பு அரசியலே தப்பு என்று பொருள்.
So no apologetic tone please.   
----------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக