திங்கள், 20 ஏப்ரல், 2015

ஆலமரமும் நாய்க்குடைகளும்!
---------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
---------------------------------------------------------
ஈழத்து மக்கள் மேதகு பிரபாகரன் அவர்களை 
தமிழ் ஈழ தேசியத் தலைவர் என்று அழைக்கிறார்கள். 
(நன்கு கவனிக்கவும்: தமிழ் ஈழ தேசியத் தலைவர்).
ஈழத் தமிழர்கள் சம உரிமை படைத்த ஒரு தேசிய இனத்தவர் 
என்ற உண்மையை உலகுக்கு உரத்துச் சொல்லவும்,
இதை அங்கீகரிக்க மறுக்கும் சிங்களப் பேரினவாதத்தை 
தத்துவ அரசியல் களங்களில் சந்தித்து முறியடிக்கவுமே  
தமிழ் ஈழ தேசிய இனம் என்ற கருத்தாக்கம் கட்டமைக்கப் 
பட்டது. இதற்கான நியாயங்கள் அனந்தகோடி.
**
தமிழ்நாட்டில் அஹிம்சை அரசியல் நடத்துகின்ற, நாம் தமிழர் 
அமைப்பினரோ, இன்ன பிற தமிழ்தேசியப் போலிகளோ 
மேதகு பிரபாகரன் அவர்களை வெறுமனே "தேசியத் தலைவர்"
என்று அழைப்பதற்கு விடுதலைப் புலிகளோ ஈழத் தமிழர்களோ 
எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.
**
ஆழி சூழ் இப்புவி உள்ளவரை மேதகு பிரபாகரன் அவர்களின் 
பெயர் நின்று நிலவும். தங்கள் தேசத்தின் விடுதலைக்காக 
ஆயுதம் ஏந்திப் போரிட்ட போராளிகளை உலகு முழுவதும் 
உள்ள, விடுதலையை நேசிக்கும் கோடிக்கணக்கான 
மக்கள் போற்றி வருகிறார்கள். அப்படித்தான் சே குவேரா 
முதல் பிரபாகரன் வரையிலான போராளிகள் மக்களால் 
வணங்கப் படுகிறார்கள். போர்கள் நிகழ்ந்த களங்களான 
கியூபா பொலிவியா முதல் கிளிநொச்சி, வன்னி வரையிலான 
நிலங்கள் வீரத்தின் விளைநிலங்களாக மக்களால் 
கொண்டாடப் படுவது இயற்கையே. இதில் ஈழத் தமிழர்களுக்கும்  
ஈழ விடுதலையை நேசிக்கும் பிற தமிழர்களுக்கும் 
எவ்வித மயக்கமும் இல்லை. 
**   
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
பசுத்தோல் போர்த்துமேய்ந் தற்று  
என்று வள்ளுவர் கூறியது போன்று, தமிழ்நாட்டில் 
ஆயுதமறுப்பு-அஹிம்சை அரசியலில் உள்ள சில போலிகள் 
புலித்தோல் போர்த்திக் கொண்டு நடிக்கும்போது, அவர்கள் 
போர்த்தியுள்ள புலித்தோலை உருவ வேண்டியது 
அவசியமே. ஆனால், அதைச் செய்கையில் ஈழ விடுதலைப் 
போருக்கும் மேதகு பிரபாகரன் அவர்களுக்கும் பங்கம் 
நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
**
சீமான் மணியரசன் நெடுமாறன் போன்ற 
நாய்க்குடைகளை அகற்றும்போது, ஆலமரத்தின் மீது 
அரிவாள் பட்டு விடாமல் கவனத்துடன் இருக்க வேண்டும்
என்று வலியுறுத்துகிறோம்.
*************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக