திங்கள், 13 ஏப்ரல், 2015

ஜனநாயக மத்தியத்துவம் (democratic centralism) என்ற கோட்பாட்டின்
அடிப்படையில் லெனின் கட்சி கட்டினார். லெனினின் இக்கோட்பாட்டை
மாவோ ஏற்கவில்லை. அவர் கட்சிக்குள் "இருவழிப்பாதை"
(two lines struggle) என்பதை அனுமதித்தார். ஒரு குறிப்பிட்ட
சூழலில், மார்க்சியத்தைச் செயல் படுத்தும்போது, இரண்டு
முரண்பட்ட கருத்துக்கள் தோன்றுகின்றன. எது சரி என்று
உறுதி செய்ய முடியாத நிலை. இந்நிலையில் மாவோ
இரண்டு வழிகளையும் செயல்பட அனுமதித்து, நடைமுறையின்
அனுபவத்தைக் கொண்டு எது சரி என்று முடிவு எடுக்கலாம்
என்றார். அதனால்தான் அவர் இருவழிப்பாதையை
முன்மொழிந்தார். இதை விட ஜனநாயகம் என்ன வேண்டும்?    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக