செவ்வாய், 21 ஏப்ரல், 2015

அடுத்தவர் உரிமையில் தலையிடலாமா?
பெரியாரிஸ்ட்களை வன்மையாகக் கண்டிப்போம்!!
----------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------------------------------
நம் நாட்டுக்குக் கிடைத்த அற்புதமான பொக்கிஷம் 
மனு சாஸ்திரம் (அல்லது மனு தர்மம்). தேவபாஷையான 
சமஸ்கிருதத்தில் அறிஞர் மநு இந்நூலை எழுதினார். இது 
தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டு உள்ளது. இது தர்மத்தைப் 
போதிக்கும் நூல் மட்டும் அல்ல. குற்றங்களையும், பொருத்தமான   
தண்டனைகளையும் விவரிக்கும் சட்டப் புத்தகமும் ஆகும்.
**
மநு பால்ய விவாகத்தை ஆதரிக்கிறார். பெண் குழந்தைகளுக்கு 
எட்டு வயது நிறைவதற்கு முன்பே திருமணம் முடித்து விட 
வேண்டும் என்கிறார்.எட்டு வயதைக் கடந்த பெண் குழந்தைகளுக்குத் 
திருமணம் செய்து வைக்காத தகப்பன் குற்றவாளி என்கிறார் மநு.
**
இந்தக் குற்றத்துக்கு ஒரு தண்டனையும் பரிந்துரை செய்துள்ளார் 
மநு. அதன்படி, தக்க பருவத்தில் அதாவது எட்டு வயதுக்குள்,
தன் பெண்ணுக்குத் திருமணம் செய்த வைக்காத தகப்பன்,
அதற்குத் தண்டனையாக, அந்தப் பெண்ணின் மாதவிலக்கின் 
போது வெளிவரும் தீட்டு ரத்தத்தைக் குடிக்க வேண்டும்.
தீட்டு ரத்தம்  என்று நான் நாசூக்காகச் சொல்கிறேன். பாமர 
மக்களின் பேச்சு வழக்கில் இதற்குரிய சொல் என்னவென்று 
நான் கூற விரும்பவில்லை.
** 
பால்ய விவாகம் பண்ண வேண்டும் அல்லது மகளின் தீட்டு 
ரத்தத்தை அப்பன் குடிக்க வேண்டும். எவ்வளவு உயர்வான 
தர்மம்! எவ்வளவு உயர்ந்த சாஸ்திரம்!! உயர்ந்த பிராமண 
சிரேஷ்டரான மனுவைத் தவிர வேறு யார் இவ்வளவு 
உயர்வாகச் சிந்திக்க முடியும்?
**
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்புகளும் அவற்றின் 
தலைவர்களும் மநு சாஸ்திரப்படி, பால்ய விவாகம் செய்ய 
விரும்புகிறார்கள். செய்ய முடியாமல்  போனால், மநு 
சாஸ்திரப்படி, அதை, அந்தத் தூ..........யைக் குடிக்கிறார்கள்.
இதில் பெரியாரிஸ்ட்களுக்கு ஏன் வலிக்கிறது?
**
"அதை"க் குடிப்பது ஆர்.எஸ்.எஸ்காரர்களின் உரிமை.
அதில் போய் வலியத் தலையிடும் பெரியாரிஸ்ட்களின் 
செயல் கண்டிக்கத் தக்கது!!  
************************************************************************. 
 தகவல் ஆதாரம்:
--------------------------
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய 
இந்து மதம் எங்கே போகிறது? என்ற நூல். முதல் பதிப்பு,
டிசம்பர் 2005, நக்கீரன் வெளியீடு. பக்கம்-336.
------------------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக