தேச பக்தர் விருதுநகர் கோவிந்தசாமி நாடார்
கதர்ச் சட்டையைத் தீ வைத்து எரித்தது ஏன்?
இந்த வரலாற்றைப் படித்தவன் பூணூலை
அறுக்கத்தான் செய்வான்!
-------------------------------------------------------------------------------------
மறைந்த தமிழறிஞர் திரு.வி.க சிறந்த தொழிற்சங்கத்
தலைவராகவும் காங்கிரஸ்காரர் ஆகவும் இருந்தார்.
"என் வாழ்க்கைக் குறிப்புகள்"என்ற நூலை இவர் எழுதி உள்ளார்.
அந்த நூலில் இருந்து, ஒரு சிறு பகுதியை தினமலர் ஏடு வெளியிட்டு
உள்ளது. (பார்க்க: தினமலர், மதுரை, 23.12.2012). அதைக் கீழே
காணவும்.
**
திருநெல்வேலியில் காங்கிரஸ் சார்பில் 'தீண்டாமை ஒழிப்பு
மாநாடு' நடைபெற்றது. மதியம் தடபுடலான விருந்து. பிரபல
தேசபக்தர் என்று பெயர் பெற்ற விருதுநகர் கோவிந்தசாமி நாடார்
என்பவர் சாப்பாட்டுப் பந்தலுக்குள் நுழைந்தார். அப்போது அங்கு
சாப்பிட்டுக் கொண்டிருந்த பிராமணர்கள் கூறினர்: "நாடாரே,
உங்களுக்கு சாப்பாடு இங்கு இல்லை; அங்கு செல்லவும்"
என்றனர். அதற்கு அவர், "நானும் சைவம்தானே"என்றார்.
"சைவத்திற்காக இல்லை, நீங்கள் அங்கே செல்லுங்கள்" என்று
அந்த பிராமணர்கள் உரக்க சத்தம் போட்டுக் கூறினார்.
**
கோவிந்தசாமி நாடாருக்கோ ஆத்திரம் தாங்கவில்லை.
உடனே மாநாட்டை விட்டு வெளியேறி, விருதுநகர்
புறப்பட்டு வந்தார். தான் போட்டிருந்த கதர்ச் சட்டையை
நடுரோட்டில் தீவைத்துக் கொளுத்தினார்.
**
1920களில் நடந்த இந்த நிகழ்வை திரு.வி.க அவர்கள்
விவரித்து உள்ளார். அந்தக் காலக் கட்டத்தில் தமிழ்ச்
சமூகம் இப்படித்தான் இருந்தது. சாப்பாட்டுப் பந்தியில்
சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் பந்திக்கு
முந்துபவர்கள். கோவிந்தசாமி நாடாரோ படைக்கு
முந்துபவர். ஆனாலும் அவர் ஒரு சூத்திரன் என்பதால்
பார்ப்பனர்களால் இழிவு செய்யப் பட்டார்.
**
இந்த வரலாற்றை எல்லாம் படிக்கிற, படித்த ஒரு
மானமுள்ள சூத்திர இளைஞன், பூணூலை அறுக்காமல்
என்ன செய்வான்? பார்ப்பனர்களே, இதற்கு உங்களின்
பதில் என்ன?
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக