பார்ப்பான், பிராமணன் எது சரி?
-------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
-------------------------------------------------------
பார்ப்பனர்களை எப்படிக் குறிப்பது? பார்ப்பனர் என்று குறிப்பதா
அல்லது பிராமணர் என்று குறிப்பதா, எது சரியானது?
பார்ப்பனர் என்று குறிப்பிட்டால், வேண்டுமென்றே அவர்களை
இழிவு படுத்துவதாகச் சில மூடர்கள் நினைக்கிறார்கள்.
எனவே உண்மை என்ன என்பதை ஆராய்ந்து அறிவோம்.
**
திருப்பாவை பாடிய ஆண்டாளை தமிழ் கற்றவர்கள்
அறிவர். நாச்சியார் திருமொழி என்ற நூலையும் பாடி
இருக்கிறார் ஆண்டாள். ஆண்டாளின் வாரணம் ஆயிரம்
என்ற தலைப்பிலான பதினோரு பாசுரங்களில், நாலாவது
பாசுரத்தைப் பார்ப்போம். அரங்கனுக்கும் தனக்கும் திருமணம்
நடப்பதாகக் கற்பனை செய்த ஆண்டாள், இப்பாசுரங்களில்
மணவினைகளை (திருமணச் சடங்குகளை) விவரிக்கிறார்.
**
"நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்திப்
பூப்புனை கன்னிப் புனிதனோடு என்தன்னைக்
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான்."
**
இப்பாசுரத்தில் இரண்டாம் அடியில் உள்ள, பார்ப்பனச்
சிட்டர்கள் என்ற சொல்லாட்சியைக் கவனிக்கவும்.
இதற்கு சிறந்த பார்ப்பனர்கள் என்று பொருள்.
ஆக, ஆண்டாளே பார்ப்பனர் என்ற சொல்லைத்தான்
குறிப்பிடுகிறாள் என்ற பின்பு, வேறு எந்த ஞமலியும்
குரைக்க முடியுமா?
**
அடுத்து சிலப்பதிகாரத்தைப் பாருங்கள்:
"குண்டப் பார்ப்பீர் என்னோடு ஓதிஎன்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னென
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்
ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்"
என்று அகவலாகத் தொடரும்.
**
இங்கு குண்டப் பார்ப்பீர் என்ற தொடரைக் கருதவும்.
குண்டு குண்டான பார்ப்பனச் சிறுவர்களே என்று பொருள்.
ஆக, இளங்கோவடிகளும் பார்ப்பனர் என்ற சொல்லையே
பயன்படுத்துகிறார்.
**
எனவே, பார்ப்பான் என்ற சொல்லே சரியானது.
பிராமணன் என்ற சொல் தமிழ் இலக்கிய மரபில் இல்லை.
*************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக