(5) மார்க்சியத்தில் சாதியத்துக்குத் தீர்வு உள்ளதா?
தொடர் கட்டுரை-5; மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------------------
இந்தியாவுக்கு என்று எந்த வரலாறும் கிடையாது என்று
கூறும் காரல் மார்க்ஸ்!

பிரசித்தி பெற்ற அந்தக் கட்டுரையின் முதல் வரியில்,
"இந்தியாவைப் பற்றிய எனது பார்வையை இக்கட்டுரையுடன்
முடித்துக் கொள்கிறேன்" என்று எழுதி இருப்பார் மார்க்ஸ்.
தொடர்ந்து கட்டுரையின் முதல் பத்தியிலேயே,
"இந்தியாவுக்கு என்று எந்த வரலாறும் கிடையாது,
அறியப்பட்ட வரலாறு கூட" என்று அதிர்ச்சி தருவார் மார்க்ஸ்.
**
ஆறாம் வகுப்பு மாணவனுக்குக் கூட, மார்க்சின் இந்தக் கூற்று
நூறு சதமும் தவறானது என்று தெரியும். உலகின் தலைசிறந்த
நாகரிகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரிகத்தைத் தந்த
இந்தியா, அறிவியலில் தலைமை பெற்று இருந்து, 1,2,3 ஆகிய
எண்ணுருக்கள், பூஜ்யம்,சக்கரம் ஆகியவற்றை உலகுக்குக்
கொடையளித்த இந்தியா, மிகச் சிறந்த பொருள்முதல்வாதத்
தத்துவ ஞான மரபைக் கொண்டிருந்த இந்தியா, உலகச்
செம்மொழியான தமிழ் மொழியும், அதன் செழுமையான
இலக்கிய மரபும் கொண்ட இந்தியா, பௌத்த-சமண தத்துவச்
செழுமை கொண்ட இந்தியா....... இத்தகு சிறப்புப் பெற்ற
இந்தியாவுக்கு வரலாறே கிடையாது என்று கூறுகிறார்
மார்க்ஸ் என்றால், இந்தியாவைப் பற்றி அவர் அறிந்து
இருக்கவில்லை என்பதே பொருள்.
**
எனினும் இதனால் மார்க்சுக்கோ அல்லது மார்க்சியத்துக்கோ
பங்கம் நேரிட்டு விட்டது என்று கருதுவது பேதைமையுள்
எல்லாம் பேதைமை ஆகும். நமது முந்திய கட்டுரைகளில்
மூல ஆசான்கள் கீழ்த்திசைச் சமூகங்கள் பற்றிப் போதிய
அளவு அறிந்து இருக்கவில்லை என்று குறிப்பிட்டு
இருந்தோம். இதைத் தொடர்ந்து நுனிப்புல் மார்க்சியர்களின்
கிணற்றுத் தவளைக் கூச்சல்கள் காதை அடைத்தன.
அவர்களுக்கும் உண்மை தெரிய வேண்டும் என்ற நோக்குடனே
இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது. நமது முந்தைய கட்டுரைகள்
முற்றிலும் சரியானவையே என்று இது நிரூபிக்கிறது.
**
காரல் மார்க்சின் பிரசித்தி பெற்ற அந்தக் கட்டுரை நியூயார்க்
டெய்லி டிரிபியூன் என்ற அமெரிக்கப் பத்திரிகையில்
வெளியானது. (எண்: 3840, ஆகஸ்ட் 8, 1853). பின்னாளில்
இக்கட்டுரை மார்க்ஸ்-எங்கல்ஸ் தொகுப்பு நூல்களில்
(வால்யூம்-12, பக்கம்: 217-222) சேர்க்கப் பட்டது.
கட்டுரைத் தலைப்பு: "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்
எதிர்கால விளைவுகள்". மார்க்ஸ் லண்டனில் இருந்து எழுதியது.
**
ஆங்கில மூலத்தில் இருந்து.....
-----------------------------------------------
"INDIAN SOCIETY HAS NO HISTORY AT ALL, ATLEAST NO KNOWN
HISTORY. What we call its history, is but the history of the successive
intruders who founded their empires on the passive basis of that unresisting
and unchanging society."
---Marx Engels collected works, vol-12 pp-217-221.......
........தொடரும்......
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக