வெள்ளி, 24 ஏப்ரல், 2015

நாம் தமிழர் கட்சியில் மீண்டும் பிளவா?
செந்தில்நாதன் சேகுவேரா கலகம்! சீமான் கலக்கம்!!
----------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-----------------------------------------------------------------------------------
மலையாளியான சீமானின் தலைமையில் தமிழ் தேசியம் 
அமைக்க முடியாது என்பதால், அய்யநாதன் நாம் தமிழர் 
கட்சியில் இருந்து விலகினார். இதனால் பிளவுண்டும் 
பலவீனம் அடைந்தும் விட்ட நாம் தமிழர் கட்சியைச் 
சீரமைக்க சீமான் சில அதிரடி நடவடிக்கைளை எடுத்தார்.
**
வீரத் தமிழர் முன்னணி என்ற ஒரு துணை அமைப்பை 
ஆரம்பித்தார். முருகனுக்குக் காவடி எடுப்பது போன்ற 
பக்திக் காரியங்களை இந்த அமைப்பின் மூலமாக 
மேற்கொண்டார். பக்தர்களின் வாக்குகளைக் குறிவைத்தே 
இந்த நடவடிக்கை. இந்த வீரத் தமிழர் முன்னணியின் 
தலைவராக இருப்பவர் திரு செந்தில்நாதன் சேகுவேரா  
என்பவர். இவர் தற்போது ஒரு பெரிய வில்லங்கத்தை 
ஏற்படுத்தி, சீமானைக் கதி கலங்க அடித்துள்ளார்.
**
தந்தை பெரியாரை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றும் 
அப்படி விமர்சிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப் 
படுவார்கள் என்றும் சீமான் அறிவித்தார். சீமானின் இந்த 
அறிவிப்பை மீறி, செந்தில்நாதன் சேகுவேரா பெரியாரை 
விமர்சித்துமுகநூலில் கட்டுரை எழுதி உள்ளார். இது 
நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை 
ஏற்படுத்தி உள்ளது.   
**
சீமானின் கட்டளையையே மீறும் அளவுக்குத் துணிந்து 
விட்ட செந்தில்நாதன் சேகுவேராவின் கட்டுரையால் 
கலக்கம் அடைந்துள்ள சீமான் என்ன செய்யப் 
போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரின் கட்சியினரிடம் 
பரபரப்பைத் தூண்டி உள்ளது. திரு செந்தில்நாதனைக் 
கட்சியை விட்டு நீக்கத் துணிந்து விட்டார் சீமான் என்று 
பெயர் குறிப்பிட விரும்பாத சில முக்கியஸ்தர்கள் 
தெரிவித்தனர். பொறுத்திருந்து பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக