செவ்வாய், 28 ஏப்ரல், 2015

பொருள்முதல்வாதம் காலத்தை வென்று நிற்கிறது. 
கருத்துமுதல்வாதத்தை அது ஆயிரம் களங்களில்
வீழ்த்தி விட்டது. ஆனால் இயங்கியல் அப்படி அல்ல.
பரிசோதனை அறிவியல் (Experimental Science) என்ற ஒன்று 
வந்த பின்னால், இயங்கியலின் குறைகளும் பலவீனங்களும் 
வெட்ட வெளிச்சம் ஆயின. இயங்கியல் என்பது "உண்மையைக்
கண்டறியும் முறை"யாக ஏற்கப் படுவதில் சிக்கல் எழுந்தது.
**
வாதப் பிரதிவாதம்-தர்க்கம் என்பதுதான் இயங்கியல்.
வாதத்தின் இறுதியில் எது வெல்கிறதோ அதுவே சரியானது 
என்று முடிவு கட்டுவதுதான் இயங்கியல். இது புராதன 
கிரேக்க அறிஞர்கள் கண்டறிந்த முறையாகும். இப்படி 
இயங்கியல் அடிப்படையில் பண்டைய அறிஞர்கள் வந்தடைந்த 
முடிவுகளில் ஒன்றுதான் புவிமையக் கொள்கை எனப்படும் 
Geocentric Theory. இது தவறு என்று இன்று உலகம் அறியும்.
**
பரிசோதனை இயற்பியல் வந்த பின்னால், உண்மையைக் 
கண்டறியும் சிறந்த முறைகளில் ஒன்றாக, பரிசோதனை 
செய்து பார்ப்பது என்ற வழிமுறை மேலோங்கத் தொடங்கியது.
இது இயங்கியலின் தலைமைப் பாத்திரத்தை முடிவுக்குக் 
கொண்டு வந்தது.
-----------------------------------------------------------------------------------------------------
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக