சனி, 25 ஏப்ரல், 2015

ஓட்டல்கள் மூடப்படும்!
நாடெங்கும் கஞ்சித் தொட்டிகள் திறக்கப் படும்!!
மோடி அரசின் நிலப் பறிப்புச் சட்டத்தின் விளைவுகள்!!!
------------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------------------- 
அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நிலம் தேவைப் படுகிறது.
நெடுஞ்சாலைகள் அமைக்க, அணைகளைக் கட்ட, ஆலைகளை 
நிறுவ, அனல்/புனல் மின் நிலையங்களை அமைக்க, ரயில் பாதைகள் அமைக்க இன்ன பிற தேவைகளுக்கு, அரசுக்கு நிலம் தேவை.
தேவையான நிலத்தை அரசு பெறுவதை நிலம் கையகப் 
படுத்தல் என்கிறோம்.
**
இந்தியாவில், இவ்வாறு நிலம் கையகப் படுத்துவதற்கான 
நெறிமுறைகளை வரையறுக்கும் சட்டம் எதுவும் இல்லை.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 1894ஆம் 
ஆண்டுச் சட்டம்தான் நடைமுறையில் இருந்தது. நேரு,
சாஸ்திரி, இந்திரா, ராஜீவ், வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரதமர்களும் 
இந்தச் சட்டத்தைத்தான் (1894 சட்டம்) பயன்படுத்தி வந்தனர்.
**
பிரிட்டிஷ் காலத்துச் சட்டமான இந்தச் சட்டம் இன்றைய 
நிலைக்குத் துளியும் பொருந்தாத, மக்கள் விரோதச் சட்டம்.
எனவே, இச்சட்டத்தை ரத்து செய்து, புதியதொரு சட்டத்தை 
இயற்ற, டாக்டர் மன்மோகன் சிங் முன்வந்தார். 2013இல் 
அவர் கொண்டு வந்து இந்திய நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்ட
சட்டம்தான் LARR ACT 2013 எனப்படும் நிலம் கையகப் படுத்தல் 
சட்டம். LAND ACQUISITION, REHABILITATION AND RESETTLEMENT 
ACT 2013 என்ற அச்சட்டம் 2013 முதல் செயல்பாட்டுக்கு 
வந்து விட்டது.
**
சில பல குறைகள் இருந்தாலும், மன்மோகன் சிங்கின் 
லார் சட்டம் பின்வரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டது.
1) நிலச் சொந்தக்காரனின் அனுமதி இல்லாமல் நிலம் 
கையகப் படுத்தக் கூடாது.
2) சமூகப் பாதிப்பு மதிப்பீடு செய்ய வேண்டும். அதாவது,
ஒரு ஊரில் அல்லது ஒரு ஏரியாவில் பலரும் தங்கள் 
நிலத்தைக் கொடுத்த பின்னால், அவர்களின் வாழ்வாதாரம் 
பாதிக்கப் படலாம். எனவே, நிலம் கையகப் படுத்திய பின்னால்,
அப்பகுதிவாழ் மக்களிடையே ஏற்படும் சமூக ரீதியிலான 
பாதிப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இது சமூகப் 
பாதிப்பு மதிப்பீடு (SOCIAL IMPACT ASSESSMENT) எனப்படும்.
**
3) கையகப் படுத்தப்பட்ட நிலம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் 
பயன்படுத்தப் படாவிட்டால், நிலம் திருப்பிக் கொடுக்கப் பட 
வேண்டும்.
4) இழப்பீடு, மீள்குடியமர்த்தல் ஆகியவை அரசு அதிகாரிகளால் 
மேற்கொள்ளப் படாவிட்டால், பாதிக்கப் பட்டவர்கள் 
சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடரலாம்.
**
மேற்கூறிய நான்கு அம்சங்களும் மிகவும் முக்கியமானவை.
மன்மோகன்சிங்கின் "லார் சட்டம்"உண்மையில் சிறந்த ஒரு 
சட்டமே. தற்போது, மோடி அரசு கொண்டு வந்த அவசரச் 
சட்டத்திலும், தாக்கல் செய்த மசோதாவிலும், மேற்கூறிய 
நான்கு அம்சங்களும் நீக்கப் பட்டு விட்டன. மோடி அரசின் 
சட்டம் ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கும், பெரும் 
கார்ப்போரேட் நிறுவனங்களுக்கும் நாட்டின் நிலத்தை,
விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கும் 
தீய சட்டம்; மக்கள் விரோதச் சட்டம்.
**
இந்தச் சட்டத்தைத்தான் அதிமுகவின் 37 எம்.பி.க்களும் 
ஆதரித்து வாக்களித்தனர். இந்தச் சட்டம் செயல்பாட்டுக்கு
வந்தால் விவசாயிகள் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து 
கொண்டு சாவார்கள். நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்படும்.
நடுத்தர வர்க்கத்தினர் யாரும் வீடு வாங்குவது என்பதை 
நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 
**
ரியல் எஸ்டேட் மபியாக்களின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும். 
மக்களின் வாழ்வாதாரம் பறிபோய் வீதிகளில் பிச்சை எடுக்க நேரிடும்.
ஓட்டல்கள் மூடப்பட்டு ஊரெங்கும் கஞ்சித் தொட்டிகள் 
திறக்கப் படும். மனிதகுல வரலாறு கண்டிராத மோசமான 
சட்டம் இது. இந்த சட்டம் நிறைவேறாமல் தடுக்கப் 
போராட வேண்டும். போராடி முறியடிக்க வேண்டும்.
****************************************************************       
   
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக