சனி, 18 ஏப்ரல், 2015

இணையதள நடுநிலையை விஷம் வைத்துக் கொல்ல 
வெறி பிடித்து அலையும் சுனில் மிட்டல்!
தொலை தொடர்புத் துறையில் தாதா கலாச்சாரம்!
(further more on Net Neutrality) 
-----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------------
ஏர்டெல் அதிபர் சுனில் மிட்டல் ஒரு சங்கம் வைத்து இருக்கிறார்.
அதன் பெயர் COAI (Cellular Operators Association of India). இருபது 
ஆண்டுகளுக்கு முன்பு 1995இல் இந்த அமைப்பை உருவாக்கினார் 
மிட்டல். இதன் தலைவராக தற்போது MARTEN PIETERS என்பவர் 
இருக்கிறார். துணைத்தலைவராக உள்ள கோபால் மிட்டல், தாம்பரம் 
கிறிஸ்துவக் கல்லூரியில் படித்தவர். இவர் ஏர்டெல் நிறுவனத்தின் 
MD மற்றும் CEO. இதன் டைரக்டர் ஜெனரல்ஆக இருப்பவர் 
ராஜன் எஸ் மாத்யூஸ்.
**
COAI அமைப்பில் முதன்மை உறுப்பினர்களாக (CORE MEMBERS)
இருக்கும் நிறுவனங்கள் ஏழு மட்டுமே. அவை: 1. ஏர்டெல் 
2.ஏர்செல் 3.வோடா போன் 4. ரிலையன்ஸ் ஜியோ 5.யூனிநார் 
6. ஐடியா செல்லூலர் 7. வீடியோகான். இவற்றுக்கு மட்டுமே 
வாக்குரிமை உண்டு. இவை தவிர, நோக்கியா, ZTE, எரிக்சன்,
போன்ற  "சேவை வழங்கா நிறுவனங்கள்" பல ASSOCIATE 
MEMBERS என்னும் அலங்காரப் பதவியில் உள்ளன. ஜெனரல் பாடி 
மீட்டிங் நடக்கும்போது, ASSOCIATE MEMBERகளுக்கு வெறும் 
AUDIENCE அந்தஸ்து மட்டுமே உண்டு.    
**
இந்த அமைப்பை வைத்துக் கொண்டு, சுனில் மிட்டல் 
TRAI அமைப்பை, தொலைதொடர்பு அமைச்சகத்தை, ஏன் இந்த 
நாட்டையே மிரட்டி வருகிறார். இணையதள நடுநிலைக்குச் 
சமாதி கட்டத் துடிக்கிறார். தான் வைத்ததே சட்டம் என்று
கொக்கரிக்கிறார்.
**
உண்மையில் இவரது COAI அமைப்பு, சேவை வழங்கும் 
அனைத்து நிறுவனங்களின் கருத்தைப் பிரதிபலிக்கிறதா 
என்றால் இல்லை. COAI அமைப்புக்கு பிரதிநிதித்துவப் பண்பு 
கிடையாது. இந்த அமைப்பில், அரசுத்துறை நிறுவனங்களான 
BSNL மற்றும் MTNL உறுப்பினர்களாக இல்லை. (இருக்க வேண்டிய 
அவசியமும் இல்லை. ஜேப்பியாரின் சுயநிதிக் கல்லூரிகளின் 
சங்கத்தில் அண்ணா பல்கலை உறுப்பினராக இல்லை அல்லவா)
**
அனைத்து தனியார் நிறுவனங்களும் (ISPs) இந்த  COAI 
அமைப்பில் உறுப்பினர்களா என்றால் அதுவும் இல்லை. 
டாட்டாவின் Tata Teleservices நிறுவனம்  COAIயில் உறுப்பினராக 
இல்லை. டாட்டா நிறுவனத்துக்கு வாக்குரிமை வழங்கப் 
படாததைக் கண்டித்து, 2008இல் இதில் சேர்ந்த டாட்டா 2010இல் 
விலகினார். தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தாலும், CDMA தொழில் 
நுட்பம் மூலமாகச் சேவை வழங்கும் நிறுவனங்களை COAIயில் 
சேர்ப்பது இல்லை. GSM தொழில்நுட்பம் மூலமாகச் சேவை 
வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே இதில் உறுப்பினராக 
முடியும்.
**
ஆக எந்த விதத்தில் பார்த்தாலும், அனைத்து சேவை வழங்கும் 
நிறுவனங்களையும் அவற்றின் நலன்களையும் 
பிரதிபலிக்காமல், தமது சொந்த சுயநலனுக்காக சுனில் மிட்டல் 
உருவாக்கிய அமைப்பே COAI என்பது புலப் படுகிறது.
ஏரியா தாதா போலச் செயல்படும் COAI அமைப்பையும் 
சுனில் மிட்டலையும், இணையதள நடுநிலையைச்
சீர்குலைக்கும் அவர்களின் முயற்சிகளையும் எதிர்த்துப் 
போராடி முறியடிப்போம்.
*********************************************************************************     
                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக