ராகுல் காந்தி அல்ல, ராகுல் குல்லார் என்ன முடிவு எடுப்பார்?
(More on NETWORK NEUTRALITY)
---------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------------
இணையதள நடுநிலை (NETWORK NEUTRALITY) பற்றி முடிவு எடுக்க
இருக்கும் இவர் சர்வ வல்லமை வாய்ந்த TRAI அமைப்பின் தலைவர்.
இவர் பெயர் ராகுல் குல்லார். இவர் வரும் 2015 மே மாதத்தில்
பணி ஒய்வு பெற இருக்கிறார். ஒய்வு பெறுவதற்குள் நல்ல முடிவு
எடுத்தால் பரவாயில்லை.
இந்தப் பதவிக்கு வரும் முன்பு, வணிகத் துறையின் செயலராக
(SECRETARY, COMMERCE) இருந்தவர்.
TRAI என்றால் Telecom Regulatory Authority of India என்று பொருள்.
அரசின் ஏகபோகமாக இருந்த டெலிகாம் துறையில் தனியார்
நிறுவனங்கள் அனுமதிக்கப் பட்ட பிறகு, ஒரு மத்தியஸ்த
அமைப்புக்கான தேவை இயற்கையாக எழுந்தது. அதைத்
தொடர்ந்து, 1997 பெப்ரவரி 20இல் TRAI அமைப்பு உருவானது.
ஆலோசகர்கள், உறுப்பினர்கள், செயலர், தலைவர் என்று
மொத்தம் பதினைந்து இருபது பேர் கொண்ட அமைப்பு இது.
TRAI versus COAI.
COAI என்று ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்கிறது.
COAI என்றால் Cellular Operators Association of India என்று பொருள்.
2007-2008 காலக் கட்டத்தில் இதன் தலைவராக மிட்டல்
இருந்தார். அதாவது ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில்
மிட்டல். (யாராவது லட்சுமி மிட்டலை நினைத்துக் கொண்டால்
அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல. லட்சுமி மிட்டல் ஒரு
steel tycoon.)
தமிழ்நாட்டில் சுயநிதிப் பொறியியல் கல்லூரி அதிபர்களின்
சங்கத்துக்கு ஜேப்பியார் தலைவராக இருப்பது போல்,
COAI அமைப்பின் தலைவராக, சுனில் மிட்டல் இருந்தார்.
இப்போது இருப்பவரும் அவரின் ஆதரவாளர்தான். சுனில்
மிட்டல் அசாதாரணமான சக்தி வாய்ந்த நபர். தன்னை
எதிர்த்த முன்னாள் அமைச்சர் ஆ ராசாவை நாசம்
செய்தவர். இவர் தற்போது இணையதள நடுநிலையின் மீது
கத்தியைப் பாய்ச்சுகிறார்.
TRAI அமைப்பு நேர்மையான, நியாயமாக மத்தியஸ்தம்
செய்யும் அமைப்பு என்றால், டெலிகாம் விவகாரங்கள்
எல்லாமே TRAI versus COAI என்று இருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்பது வரலாறு, நடப்பு!
TRAI in favour of COAI என்பதற்கு ஆயிரம் சான்றுகள்
காட்ட இயலும். எனவே, இணையதள நடுநிலை
விவகாரத்தில், TRAI அமைப்பு COAI பக்கம் சாய்ந்து
விடாமல் தடுக்க வேண்டும். அதற்காகத்தான்
SAVE THE INTERNET CAMPAIGN. இதில் அனைவரும்
பங்கு கொள்ள வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் கேட்டுக் கொள்கிறது.
................தோழமையுடன்,...................
-------------நியூட்டன் அறிவியல் மன்றம், சென்னை, 17.04.2015.------
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக