புதன், 22 ஏப்ரல், 2015

மகாத்மா காந்தி இருக்கும்வரை இந்துக்களுக்கு 
விமோசனம் இல்லை எனவே காந்தியைக் கொன்று 
விட வேண்டும் என்று தீர்மானித்த கோட்சே, அதைச் 
செய்து முடித்தார். காந்தியைக் கொன்ற தன்னைச் 
சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று நன்கு தெரிந்துதான் 
கோட்சே அதைச் செய்தார். அவர் சாவுக்கு அஞ்சவில்லை.
**
அது போலவே பூணூலை அறுத்தால் சிறைக்குப் போக 
வேண்டும், தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே 
இந்த இளைஞர்கள் பூணூலை அறுத்துள்ளனர். சிறை 
செல்ல அஞ்சாமல் சரண் அடைந்துள்ளனர்.
**
இந்த இரு நிகழ்வுகளிலும் குற்றங்களைச் செய்தவர்கள் 
தனிப்பட்ட பகைமையால் செய்யவில்லை. ஒரு கருத்தால்
ஈர்க்கப் பட்டே செய்துள்ளனர். அவரவர் நியாயம் அவர்களுக்கு.
**
எனவே, நிகழ்வுகளை போஸ்ட்மார்ட்டம் செய்து கொண்டும்,
பகைமையை வளர்த்துக் கொண்டும் போவதால் பயன் இல்லை.
சமூகம் மேம்பட வேண்டும் எனில், அமைதி வேண்டும்.
எனவே சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் 
பாடுபடுவதே இன்றைய கடமை ஆகும்.
----------------------------------------------------------------------------------   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக