திங்கள், 20 ஏப்ரல், 2015

இஸ்லாம் மதத்துக்கு மாறுவாரா ஹெச் ராஜா?
--------------------------------------------------------------------------------
இந்து மதம் என்பது நாத்திகத்தையும் உள்ளடக்கியது.
அதாவது கடவுளை மறுப்பவர்களுக்கும் இந்து மதத்தில் 
இடம் உண்டு. இந்து மதம் நாத்திகத்தை ஏற்றுக் கொள்வதானது
திரு ஹெச் ராஜா அவர்களை உறுத்துகிறது என்றால்,
தாரளமாக அவர் இந்து மதத்தை விட்ட வெளியேறலாம்.
வெளியேறி, அரபு மொழி கற்றுக் கொண்டு, சுன்னத் செய்து கொண்டு, நாத்திகத்தை அனுமதிக்காத மதமான இஸ்லாமில் 
சேர்ந்து விடலாம்.
***
பெரியார் சிலைகளின் பீடங்களில் உள்ள நாத்திக 
வாசகங்களை அகற்ற வேண்டும் என்று கூறி வரும் ஹெச் ராஜா 
அவர்களுக்கு நியூட்டன் அறிவியல் மன்றம் சொன்ன பதில்.
(பார்க்க: கேப்டன் நியூஸ் தொலைக் காட்சியின் விவாதம் 
18.04.2015 இரவு 9 மணி to 10 மணி)
**
பின்குறிப்பு:
------------------
இந்து மதம் எந்த ஒரு தனி நபராலோ, பலராலோ ஸ்தாபிக்கப் 
பட்ட மதம் அல்ல. இந்து மதத்துக்கு எந்த ஒரு புனித நூலும் 
கிடையாது. பகவத் கீதையோ திருக்குறளோ இந்து  மதத்தின் 
புனித நூல் அல்ல. இந்து அனுஷ்டானங்களை ஒருவர்  கடைப்
பிடிக்காவிட்டாலும் அவர் இந்துவே. இவ்வாறு ஒரு உச்ச 
நீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது. ஆகவே, நாத்திகனும் 
இந்துவாகவே கருதப் படுவான்.
******************************************************************
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக