வெள்ளி, 24 ஏப்ரல், 2015

வில்சன் சிகரத்தில் உள்ள தொலைநோக்கியும் 
ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கியும்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் 
ஏஞ்சல்ஸ் நகருக்கு வடகிழக்கே சான் கபிரியேல் மலை 
(San Gabriel mountain) உள்ளது. இம்மலையில் 5700 அடி உயரத்தில் 
வில்சன் சிகரம் (Mount Wilson) உள்ளது. இந்த மலைச் சிகரத்தில் 
உள்ள வானியல் நோக்கு மையத்தில் பல தொலைநோக்கிகள் 
வைக்கப் பட்டு உள்ளன. இங்குதான் வானியல் ஆய்வாளர் 
ஹப்பிள் ஆய்வு செய்தார்.
**
எனினும் இது பூமியில் நிறுவப்பட்டுள்ள தொலைநோக்கி.
தூரத்து வான் பொருளில் இருந்து வரும் ஒளியானது, பூமியின் 
வளிமண்டலத்தை தாண்டி வரும்போது பலமுறை 
பிரதிபலித்தலுக்கு உள்ளாகிறது. இதன் காரணமாக 
கிடைக்கிற பிம்பங்கள் துல்லியமாக இருப்பதில்லை.
**
எனவேதான், ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் 
நல்ல உயரத்தில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 552 அடி 
உயரத்தில் வைக்கப் பட்டு உள்ளது. பூமியின் வளிமண்டலத்தைக் 
கடந்து இத்தொலை நோக்கி இருப்பதால் துல்லியமாக 
பிம்பங்கள் கிடைக்கின்றன.
**
நமது பிரபஞ்சம் நிலையாக இருப்பது அல்ல, அது விரிவு 
அடைந்து கொண்டே இருக்கிறது என்ற உண்மையை 
வில்சன் தொலைநோக்கி மூலமே ஹப்பிள் கண்டறிந்தார்.
இன்று, நமது பிரபஞ்சம் வேகமாக விரிவடையும் பிரபஞ்சம் 
(ACCELERATING UNIVERSE) என்பது கண்டறியப் பட்டுள்ளது.
இந்தப் பேருண்மையைக் கண்டறிவதில் தொலைநோக்கிகளின் 
பங்கு மகத்தானது.
********************************************************************    
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக