வியாழன், 30 ஏப்ரல், 2015

(4) மார்க்சியத்தில் சாதியத்துக்குத் தீர்வு உள்ளதா?
தொடர் கட்டுரை-4; மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
---------------------------------------------------------------------------------
பிரிட்டிஷ் ஆட்சி சாதியை ஒழித்து விடும் என்ற 
எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை!
---------------------------------------------------------------------------------
வேலைப்பிரிவினை தான் (Division of labour) 
சாதியத்தைத் தோற்றுவித்தது என்று கருதுகிறார் மார்க்ஸ்.
மானுட வாழ்வில் வேலைப் பிரிவினை இல்லாத சமூகம் இல்லை.  உலகெங்கும் வேலைப் பிரிவினைகள் இருந்தன. அங்கெல்லாம் 
சாதிகள் ஏன் தோன்றவில்லை? ஐரோப்பிய சமூகத்தில் 
வேலைப் பிரிவினை இருந்தது. ஆனால் அங்கு சாதி 
தோன்றவில்லையே ஏன்? இவ்வாறு கேள்விகள் எழுகின்றன.
**
(ஒரு சமூகத்தில் பல விதமான வேலைகள் உண்டு. விவசாயம்,
மற்றும் தச்சு வேலை, கொல்லர் வேலை, நெசவு போன்ற
கைவினைஞர் வேலைகள், ஆசிரியப்பணி, புரோகிதம் என்று 
இவ்வாறு உள்ள பல்வேறு வேலைகளை, ஒரு சமூகத்தின் 
உறுப்பினர்கள் தங்களுக்குள் பிரித்துக் கொள்வது 
வேலைப் பிரிவினை ஆகும்.)
**  
எனவே, வேலைப் பிரிவினை மட்டுமே (கவனிக்கவும்: மட்டுமே)
சாதியைத் தோற்றுவித்தது என்று கருத முடியாது. வேறு 
காரணிகளும் உண்டு. அவற்றைப் பின்னர் பார்ப்போம்.
**
மார்க்ஸ் கருதியபடி பிரிட்டிஷ் ஆட்சியால்  சாதியை ஒழிக்க 
முடியவில்லை. ரயில்பாதைகள் போடப் பட்டதாலோ,
தொழில் வளர்ச்சி ஏற்பட்டதாலோ சாதி ஒழிந்து விடவில்லை.  
**
டல்ஹவுசி காலத்திலேயே இந்தியாவில் 
ரயில்பாதை போடப்பட்டு விட்டது. 1853 ஏப்ரல் 16 அன்று 
மும்பைக்கும் தாணாவுக்கும் இடையில் 34 கிமீ தூரமுள்ள 
ரயில்பாதையில் முதல் ரயில் விடப்பட்டது. மார்க்ஸ் 
இக்கட்டுரையை எழுதிய அதே 1853இல் இந்தியாவில் ரயில் 
பயணம் தொடங்கி விட்டது. இன்று 2015இல் இந்திய ரயில்வே 
1,15,000 கிமீ நீளமுள்ள ரயில்பாதையைக் கொண்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு இரண்டேகால் கோடி பயணிகள் பயணம் 
செய்கின்றனர். மேலும் கடந்த ஆண்டில் (2014-15) 105 கோடி 
டன் சரக்குகள் கையாளப் பட்டன. 
**
இந்தியாவில் தொழில் வளர்ச்சி பெருகி உள்ளது. பெரும் 
தொழிற்சாலைகள் நிறுவப் பட்டுள்ளன. சந்திரனுக்கும் 
செவ்வாய்க்கும் சந்திரயான் மற்றும் மங்கள்யான்
செயற்கைக் கோள்கள் விடப் பட்டுள்ளன. என்றாலும் சாதி 
ஒழியவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாலும் ஒழிக்க 
முடியவில்லை. சுதந்திர இந்திய அரசாலும் ஒழிக்க 
முடியவில்லை.
**
ஆக, மார்க்சியம் கணித்தபடி, தொழில் வளர்ச்சியால் 
சாதி ஒழிந்து விடவில்லை. ஏன் என்பதை அடுத்துப் 
பார்ப்போம்.-----------தொடரும்------------------
****************************************************************
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக