செவ்வாய், 6 அக்டோபர், 2015

5000 ஷேர்கள்! 5000 ஷேர்கள்!
ஏர்டெல் 4G சந்தி சிரித்த கதை என்ற எமது 
முகநூல் கட்டுரை 5000 பகிர்வுகளைக் கண்டுள்ளது!
-------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------------------------------
செப் 25 மாலை 5 மணிக்கு நாங்கள்  வெளியிட்ட,
"சவாலுக்கு அழைத்த ஏர்டெல் 4G சந்தி சிரித்த கதை"  
என்ற முகநூல் கட்டுரை இன்று (06.10.2015) மாலையுடன்,
5000 ஷேர்களைக் கண்டுள்ளது.

இது எதைக் காட்டுகிறது?
-----------------------------------------
1) சமூகத் தாக்கம் (social impact) உடைய, மக்களைப் பாதிக்கிற 
விஷயங்களில், நியூட்டன் அறிவியல் மன்றம், மக்களுக்கு 
எதிரான மோசடிகளை அறிவியல் ரீதியாக அம்பலப் படுத்தி,
மக்களிடம் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
இது மக்களால் வரவேற்கப் படுகிறது.

2) ஏர்டெல்லின் மோசடிகளும் பித்தலாட்டங்களும் அவர்களின் 
வாடிக்கையாளர்களிடம் கடுமையான அதிருப்தியை 
ஏற்படுத்தி உள்ளன. இனியும் ஏர்டெல்லின் பித்தலாட்டம் 
செல்லுபடி ஆகாது. விரைவிலேயே ஏர்டெல் கணிசமான 
வாடிக்கையாளர்களை இழக்கும். இந்த இழப்பு லட்சக் 
கணக்கில் இருக்கும்.

வாசகர்களின் ஆதரவுக்கு நன்றி!
*********************************************************************  
பின்குறிப்பு: தற்போது 5000 என்பதையும் தாண்டி 5049 ஷேர் 
ஆகி விட்டது. மேலும் மேலும் ஷேர் செய்யப் படுகிறது.
ஒருவேளை, infinityஇல் போய்த்தான்  நிற்குமோ?  
**************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக