புதன், 16 டிசம்பர், 2015

உச்சநீதிமன்றத் தீர்ப்பு! சமூகநீதிக்குப் பின்னடைவு!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாது!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------------
1) கலைஞர் முதல்வராக இருந்தபோது 2006ஆம் ஆண்டில்
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று
ஓர் அரசாணை (G.O) வெளியிட்டார். இதை எதிர்த்து
சிவாச்சாரியார்கள் நலச்சங்கம் உள்ளிட்ட
சில அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

2) ஒன்பது ஆண்டுகள் கழித்து, இந்த வழக்கில், இன்று
(16.12.2015) உச்சநீதி மன்றத்தின் இருவர் கொண்ட அமர்வு
தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதியரசர்கள் ரஞ்சன் கொகாய்,
எம்.வி.ரமணா ஆகியோர் இத்தீர்ப்பை வழங்கினர்.

3) ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க முடியும்
என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறி உள்ளது. மேலும்,
இவ்வாறு ஆகம விதிகளின்படி அர்ச்சகர்களை நியமிப்பதால்,
அரசமைப்புச் சட்டத்தின் 14ஆவது பிரிவில் கூறப்படும்,
"சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்"  (EQUALITY BEFORE LAW)
என்ற கோட்பாடு மீறப்படவில்லை என்றும் உச்சநீதி மன்றம்
தனது தீர்ப்பில் கூறி உள்ளது.

4) அதே நேரத்தில், தமிழக அரசின் எந்த அரசாணையை
எதிர்த்து வழக்குத் தொடரப் பட்டதோ அந்த அரசாணையை
உச்சநீதி மன்றம் ரத்து செய்யவில்லை என்று தெரிய
வருகிறது. எனினும் தீர்ப்பின் விவரங்கள் இன்னும் சில
மணி நேரத்தில் கிடைக்கப் பெற்ற பின்னரே, தீர்ப்பின்
முழுப் பரிமாணமும் தெரியவரும்.

5) தீர்ப்பின் பொருள் என்ன?
----------------------------------------------
அனைத்து சாதியினரும் ( பிற்பட்டோர், தலித்துகள் உட்பட)
அர்ச்சகர் ஆக முடியாது என்பதே தீர்ப்பின் சாரம் ஆகும்.

6) கலைஞருக்கு இத்தீர்ப்பு ஒரு பின்னடைவே! 1970 முதல்
இடைவிடாமலும் தளரா முயற்சியுடனும் அனைத்து
சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடும்
கலைஞருக்கு இது நிச்சயமாக ஒரு பின்னடைவே.

7) இப்பொருள் குறித்து இன்று (16.12.2015 புதன் இரவு 9 to 10 மணி)
கேப்டன் செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெறும்
விவாதத்தில் நியூட்டன் அறிவியல் மன்றம்
பங்கேற்கிறது.
--------------------------------------------------------------------------------------------------



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக