திங்கள், 21 டிசம்பர், 2015

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, சட்டமன்ற
நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், ஆதாயம் தரும்
வேறு எந்தப் பதவியிலும் இருக்கக் கூடாது. அந்த
வேறு பதவியின் மூலமாக, அவர் ஒரு அடையாளச்
சம்பளம் (Token salary) பெறுவாரே யானால், அதுவும்
ஆதாயமாகக் கருதப் படும்.
**
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, "சோனியா காந்தி
ஆதாயம் தரும் வேறு ஒரு பதவியில் இருக்கிறார்;
எனவே அவர் எம்.பி.யாக இருக்க முடியாது" என்று
நாடாளுமன்றத்தில் புகார் எழுந்தது. இதன் விளைவாக
சோனியா காந்தி தமது எம்.பி பதவியை ராஜினாமா
செய்தார். அதன் பிறகு, தேர்தல் ஆணையம் அந்தக்
காலி இடத்திற்குத் தேர்தல் அறிவித்தபோது, அங்கு
போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில்
ஆதாயம் தரும் அந்த உப்புப் பெறாத பதவியை ராஜினாமா
செய்து இருந்தார்.
**
அரசு உத்தியோகம் என்பது சாதாரணமானது அல்ல.
உள்ளே போவதும் கஷ்டம்; வெளியே வருவதும் கஷ்டம்.
இது தெரியாமல், சில அரைவேக்காடுகள், நாட்டில்
இருக்கிற அரசு அதிகாரிகளை எல்லாம் முதல்வர்
ஆக்க வேண்டும் என்று புறப்பட்டு இருப்பதை என்ன
சொல்ல? தமிழகம் முட்டாள்களின் சொர்க்கம் என்று
மட்டுமே சொல்ல முடியும்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக