வியாழன், 24 டிசம்பர், 2015

மக்கள் நலக் கூட்டணியை ஒரு சரியான மாற்றாக
மக்கள் ஏன் பார்ப்பதில்லை?
--------------------------------------------------------------------------------
ஆயிரம் கட்சிகள் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும்
காலங்காலமாக இருந்தே வருகின்றன. தோன்றி வளர்ந்த
பல கட்சிகள் இறந்தும் இருக்கின்றன. ராஜாஜியின்
சுதந்திராக் கட்சி, ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி,
மாணிக்கவேலரின் காமன்வீல் கட்சி, மபொசியின்
தமிழரசுக் கழகம், நாராயணசாமி நாயுடுவின்
விவசாயச் சங்கம், குமரி ஆனந்தனின் காகாதேகா
என்று பட்டியல் நீள்கிறது.

திமுக அதிமுகவுக்கு மாற்றாக இப்போதுதான் புதிதாக
ஒரு கட்சி உருவாக்கி இருப்பது போலவும், அதற்குத்
திமுக-அதிமுக கட்சிகள் தடை போடுவது போலவும்
சிலர்  ஒரு கற்பிதமான சித்திரத்தை  வரைந்து
காட்டுகிறார்கள். இது சமூகத்தின் உண்மை நிலையைப்
பிரதிபலிக்கவில்லை என்பதை அனைவரும் அறிவர்.

திமுக-அதிமுகவுக்கு மாற்றாக மூன்றாவதாக ஒரு கட்சி
வேண்டும் என்ற மக்களின் அபிலாஷைகளை வைகோ
பூர்த்தி செய்ய முன்வரவில்லை. வரலாறு தனக்கு
வழங்கிய வாய்ப்புகள் அனைத்தையும் புழுதியில்
வீ சி எறிந்தவர் வைகோ. விஜயகாந்த்தும் அவ்வாறே.
 
திமுக-அதிமுகவுடன் மாற்றி மாற்றிக் கூட்டணி வைத்த
1) வைகோ 2) கம்யூனிஸ்ட்கள் ஆகியோர் எப்படி
திமுக-அதிமுகவுக்கு மாற்று ஆக முடியும்? மக்கள்
அவர்களை நம்புவார்களா?

ஜெயலலிதாவைப் பிரதமர் ஆக்குவோம் என்ற
தா பாண்டியனின் கம்யூனிஸ்ட் கட்சியும், ஏக் தோ
சீட்டுக்காக செங்கொடியை விற்று விட்ட கம்யூனிஸ்ட்
கட்சிகளையும் மக்கள் எப்படி அய்யா ஒரு மாற்றாக
( a viable alternate) பார்ப்பார்கள்?

ஜெயலலிதா கூட்டணியில் இடமளிப்பதாக இருந்தால்,
அடுத்த நிமிடமே மக்கள் நலக் கூட்டணியை நட்டாற்றில்
விட்டு விட்டு ஓடிவிடுவார்களே கம்யூனிஸ்ட்கள்!
இவர்களை எப்படி அய்யா மக்கள் நம்புவார்கள்?

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா
தன்னை விரட்டி அடித்தபோது, அவருக்குப் பயந்து,
சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிடாமல் ஒதுங்கிய
வைகோவை மக்கள் எப்படி நம்புவார்கள்?

நம்பகத் தன்மையை முற்றிலுமாக இழந்து போய்
பட்ட மரமாக நிற்கும் வைகோவும் அவரது தற்காலிகக்
கூட்டணியும் மக்களின் நம்பிக்கையை ஒருநாளும்
பெற முடியாது என்பதுதானே யதார்த்தம்! எனவே நடுநிலைப்
போர்வையால் முகத்தை மூடியிருக்கும் ஜெயா விசுவாசிகள் 
சினம் கொள்வதில் பொருள்  இல்லை       
--------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக