வெள்ளி, 25 டிசம்பர், 2015

தோழர் தியாகுவை நன்கு அறிவேன். அவர் மூத்த
மார்க்சிய லெனினியத் தோழர். சாறு மஜும்தார் காலத்திலேயே
இயக்கத்தில் இருந்தவர். நாங்கள் எல்லாம் சாருவின் மறைவுக்குப்
பின்னரே இயக்கத்தில் சேர்ந்தோம். அவர் தூக்குத் தண்டனையில்
இருந்து மீண்டவர்.


ஆம்

தனிப்பட்ட பகையினால் அவர் கொலை செய்யவில்லை.
நக்சல்பாரி இயக்கமானது மக்களின் எதிரிகளைக்
கொலை செய்வது என்று கட்சி ரீதியாக முடிவு
எடுத்தது. கல்லூரி மாணவராக இருந்த தியாகு
நக்சல்பாரி  இயக்கத்தில் சேர்ந்து இருந்தார். கட்சி
முடிவின்படி, ஒரு கொடிய பண்ணையாரை கட்சியின்
ஆயுதக் குழு கொன்றது. அதில் அவரும் ஈடுபட்டார்.
மரண தண்டனை பெற்றார். கலைஞர் அவருக்கு
மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தார்.

கீழைக்காற்று பதிப்பகத்தில் இருந்து நூல் பட்டியல்
கேட்டிருக்கிறேன். அனுப்பி வைக்கிறேன்.

கவலைப் பட வேண்டாம். நான் நாளை மறுநாள் பட்டியல் தருகிறேன்.
தாமதத்திற்கு மன்னிக்கவும்.

தமிழ் நம் தாய். பிறந்தவை அனைத்தும் ஒருநாள்
அழிந்துதான் தீர வேண்டும். ஆனால், தமிழ் சாகும் முன்னால்
நான் செத்து விடுவேன்.


தமிழின் வாழ்நாளை நீட்டிக்கும் விதத்தில்
உறுதியாக எழுதுவேன்.



லெனின்: அரசும் புரட்சியும்
என்ன செய்ய வேண்டும்?
பிளகானவ்: வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம்
ஸ்டாலின்: இயக்கவியல் பொருள்முதல்வாதம்
எங்கல்ஸ்: குடும்பம் தனிச் சொத்து அரசு இவற்றின் தோற்றம்
இவை மூல நூல்கள். இவற்றை விளக்கி ஜார்ஜ் தாம்சன்
எழுதிய மார்க்சிய மெய்ஞானம் படிக்கவும்.


மக்கள் நலக் கூட்டணி மிகவும் தற்காலிகமானது.
தங்களின் பேர  சக்தியை அதிகரித்துக் கொள்ள வேண்டி
கம்யூனிஸ்டுகளும் வி.சி.கவும் அதில் இருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக