வெள்ளி, 25 டிசம்பர், 2015

1) ஜெயா அரசு போட்ட வழக்குகள் பொய் வழக்குகள். எனவே
அவற்றைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வதன் மூலம் உடைத்து
எறிய முடியும் என்பதே எல்லா சட்ட நிபுணர்களின்
கருத்தாக இருக்கிறது. இதன் பேரிலேயே முகிலன் சிறைக்குச்
சென்றுள்ளார்.
2) முகிலன் இதற்கு முன்னரும் ஜெயா அரசால் சிறையில்
அடைக்கப் பட்டுள்ளார், இதே கூடங்குளம் விவகாரத்தில்.
போராட்டக் காரர்கள் பலரும் சிறையில் அடைக்கப் பட்டு
உள்ளனர். தற்போது பிணையில் வெளிவந்துள்ளனரே தவிர,
வழக்கில் இருந்து விடுதலை ஆகவில்லை.
3) ஆனால் திரு உதயகுமார் மட்டிலும் ஒரு நாள் ஒரு பொழுது
கூட சிறைக்குச் சென்றதில்லை. இது பொதுவான தன்மை
அல்ல. உதயகுமாருக்கு மட்டுமே உள்ள "சிறப்பு".
4) பெப்ரவரி 2014இல் இடிந்தகரையில் இருந்து வெளியேறிய
போது, உதயகுமார் கூடங்குளம் போராட்டத்தைக் கைவிட்டு
விட்டார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக எம்.பி
ஆகி விட வேண்டும் என்ற மயக்கம் இருந்தது. எனவே
போராட்டத்தையும், போராட்டக் காரர்களையும் அந்தரத்தில்
விட்டு விட்டு எம்.பி கனவில் மூழ்கிப் போனார்.
5) அணுஉலை எதிர்ப்புப் போராளியான உதயகுமார்
அணுஉலைகளை ஆதரிக்கும் கேஜ்ரிவாலின் கட்சியில்
ஐக்கியமானதை எப்படி நியாயப் படுத்துவது?
6) உதயகுமார் கைவிட்ட போராட்டத்தை முகிலன் ஏற்று
நடத்தினார்.
இவையெல்லாம் அனைவரும் அறிந்த வரலாறே ஆகும்.
மக்களின் போராட்டங்களை மார்க்சிய லெனினியப்
பார்வையில் அணுக வேண்டும். தனிமனிதன் மீதான 
குருட்டு விசுவாசத்தின் அடிப்படையில் விஷயங்களைப்
பார்ப்பது மார்க்சிய லெனினிய அணுகுமுறை ஆகாது.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக