ஏழை நூருல்லாவின் ஆத்மா சாந்தி அடையாது!
கொலைகார சல்மான் கான் ஆனந்தக் கூத்து!
---------------------------------------------------------------------------------------------------
விடுதலையாகி வீட்டுக்கு வந்து விட்டார் சல்மான் கான்.
அவரின் வீடு, தெரு, சாலை எல்லாம் சல்மானின் கைக்கூலிகள்
பட்டாசு வெடிக்கிறார்கள். தெருவில் போவோர் வருவோர்க்கு
இனிப்பு வாயில் ஊட்டப் படுகிறது. ஒரே ஆனந்த லஹரி!
(லஹரி= வெள்ளம்; ஆனந்த லஹரி = மகிழ்ச்சி வெள்ளம்).
ஒரு படத்தில் நடிக்க சர்வ சாதாரணமாக 200 கோடி ரூபாய்
சம்பளம் வாங்குகிறவர் சல்மான் கான். மும்பை பந்த்ராவில்
உள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்ள சல்மானின்
ஆடம்பர பங்களாவைப் படத்தில் பார்க்கிறீர்கள்.
இந்த பங்களாவில் உள்ள கக்கூஸ்களைச் சுத்தம் செய்ய
ஆகும் செலவு மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் என்று
தெரிய வருகிறது.
சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்து பி.டெக் படித்து
UPSE தேர்வு எழுதி ITS பாஸ் செய்த பிறகு டெலிகாம்
துறையில் எடுத்த எடுப்பிலேயே Divisional Engineer வேலை
கிடைத்தாலும், முதல் மாதச் சம்பளம் ஒரு லட்சம்
கிடைக்காது. அதாவது சல்மான்கானின் பங்களாவின்
கக்கூஸ் பராமரிப்புச் செலவை விட இந்தச் சம்பளம் குறைவு.
சல்மான்கான் ஆதரிக்க விரும்பும் அவரின் ரசிகர்கள் இந்த
உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
குடிபோதையில் தாறுமாறாகக் காரை ஒட்டி, வீடு இல்லாமல்
பிளாட்பாரத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நூருல்லா
போன்ற ஏழை முஸ்லிம்கள் செத்துப் போவதற்குக் கடமைப்
பட்டவர்கள். 2002இல் நடந்த இந்தப் படுகொலைக்கு இன்றுவரை
நீதி கிடைக்கவில்லை. இனியும் கிடைக்காது.
விடுதலை என்று வந்த தீர்ப்பைக் கொண்டாடுவதற்காக,
சல்மான் கான் இன்னும் ஒரு மாதம் பிசியாக இருப்பார்.
அவரின் பாஸ்போர்ட்டை நீதிமன்றம் திருப்பிக் கொடுத்து
விட்டது. இனி வெற்றிவிழாக் கொண்டாட்டங்களை
லண்டன், பாரிஸ், நியூயார்க்கில் சல்மான் கொண்டாடுவார்.
அதற்கு எந்தத் தடையும் இல்லை.
நூருல்லாக்கள்! அவர்கள் தொடர்ந்து செத்துப் போய்க் கொண்டு
இருப்பார்கள்.
இந்த நாட்டில் பாட்டாளி வர்க்கப் புரட்சி வெற்றி அடையும்
நாளில் நூருல்லாக்கள் சிந்திய ரத்தத்துக்கு பதில் கிடைக்கும்.
அதுவரை சல்மான் கான் போன்ற பன்றிகள் கொழுத்துத் திரியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக