வியாழன், 24 டிசம்பர், 2015

தமிழகத்தில் இயங்கும் உண்மையான இடதுசாரிக் கட்சிகளான
மாவோயிஸ்டு கட்சி, போல்ஷ்விக் கட்சி, இன்ன பிற
மார்க்சிய-லெனினியக் கட்சிகள் எவையும் தேர்தல் அரசியலில்
பங்கேற்பது இல்லை. தேர்தல் அரசியலில் பங்கேற்கும்
CPI, CPM கட்சிகள் யாவும் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளே.
இவர்கள் அன்று எம்.ஜி.யாருக்கு முட்டுக் கொடுத்தார்கள்.
இன்று ஜெயாவுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். இவர்கள் மீது
மக்கள் எப்படி அய்யா நம்பிக்கை வைப்பார்கள்? சாட்சிக்காரன்
காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழுவதே
நல்லது என்றுதானே மக்கள் நினைப்பார்கள்.   

ஒரு அரசியல் பதிவு என்பது பெரும்பாலோரால் படிக்கப் படுவது.
எனவே அப்பதிவு எளிய தமிழில் எழுதப் பட வேண்டும்.
"பொருதுதல்" போன்ற சொற்கள் இலக்கியப் பதிவுக்கானவை.

தமிழ்ச் சூழலில் நாத்திகர் என்பவர் கடவுள் மறுப்பைப்
பிரச்சாரம் செய்பவர். அதாவது நாத்திகர் என்பது நாத்திகப்
பிரச்சாரகர் என்றே நடைமுறையில் பொருள் கொள்ளப் படுகிறது.
ஆனால் ராமானுஜன் அப்படி எந்தப் பிரச்சாரத்தையும்
மேற்கொண்டதில்லை. அவ்வாறு மேற்கொள்ளும்
எண்ணமும் அவருக்கு இருந்ததில்லை. அவரைப்
பொறுத்த மட்டில் தொடக்க காலத்தில் இறையருளால்
தமது மேதைமை உருவாகியதாகக் கருதினார்.
பின்னாளில்,  இறையருளால் உண்டாவது அல்ல
மேதைமை என்று அவர் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கக் கூடும்.
இறுதிக்கும் இறுதியில் அவர் இறைவன் என்பது ஒரு
கற்பிதமே என்று உணர்ந்து இருக்கக் கூடும். 


மக்கள் திமுகவை நான் நன்கறிவேன். அதன் தொடக்க
விழாக் கூட்டத்துக்கு நான் சென்றிருந்தேன். மிகுந்த
முற்போக்குக் கொள்கைகளைச் சொன்னார்கள். எந்தத்
தலைவரின் பெயரோடும் அவருக்குள்ள பட்டத்தைப்
போடக்கூடாது என்றார்கள். அதன்படியே நாவலர் பட்டம்
நீக்கப் பட்டு இரா நெடுஞ்செழியன் என்றே சுவரொட்டிகளில்
அச்சடிக்கப் பட்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு இலக்கான
ப உ சண்முகத்தையும் மக்கள் திமுகவில் சேர்த்துக்
கொண்டனர். இறுதியில் ராமச்சந்திர மேனனின்
திருவடியில் சரண் அடைந்து அவரை மூச்சுக்கு
முன்னூறு தரம் புரட்சித் தலைவர் என்று அழைத்து
கொள்கைக்குக் கொள்ளி  வைத்தனர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக