மழை வெள்ளத்தால் சாவு என்பது பொய்!
பொதுப்பணித்துறை செய்த படுகொலைகளே அவை!
--------------------------------------------------------------------------------------
சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் ராணுவ அதிகாரிகள் வசிக்கும்
குடியிருப்பு உள்ளது. இதற்கு Defence Officers colony என்று பெயர்.
இந்த வீட்டில் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி வெங்கடேசன்
(வயது சுமார் 70) மற்றும் அவர் மனைவி கீதா ஆகிய இருவர்
மட்டுமே வசித்து வந்தனர். இவர்களின் வீடு மேல் மாடி எதுவும்
இல்லாத தனி வீடு ஆகும்.
டிசம்பர் 1 செவ்வாய் (01.12.2015) இரவு இவர்கள் வீட்டில் தண்ணீர்
புகுந்தது. மெல்ல மெல்ல நீர் மட்டம் உயர்ந்தது. நீர்மட்டம்
அதிகரிக்க அதிகரிக்க இத்தம்பதியினர் டைனிங் டேபிள் மீது
நாற்காலியைப் போட்டு அதன் மீது ஏறி நின்று கொண்டு உதவி
உதவி என்று கூக்குரல் இட்டுள்ளனர். யாராலும் உதவிக்கு வர
இயலவில்லை. இறுதியில் நீரில் மூழ்கி இறந்து போயினர்.
அன்றுதான், டிசம்பர் 1 அன்று இரவு செம்பரம்பாக்கம் ஏரியில்
இருந்து ஒரே நேரத்தில் வினாடிக்கு 50000 கனஅடி நீர் போதிய
முன்னெச்சரிக்கை இன்றித் திறந்து விடப் பட்டது. ஈக்காட்டுத்
தாங்கலில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு தெருக்களிலும்
வீடுகளிலும் வெள்ளநீர் புகுந்தது.
அதற்கு முந்திய நாட்களில் சென்னையில் பெருமழை இல்லை.
நவம்பர் 29, 30 தேதிகளில் தினம் 5000 கனஅடி நீர் திறந்து விடப்
பட்டிருக்கும் என்றால், ஈக்காட்டுத்தாங்கல் பகுதி வெள்ளத்தில்
மூழ்கி இருக்காது. வெள்ள எச்சரிக்கை என்பது மூன்று முறை
மூன்று கட்டங்களாகக் கொடுக்கப் பட வேண்டும். அப்படியான
எச்சரிக்கை எதுவும் விடுக்காமல், யாரும் எதுவும் செய்வதற்கு
இயலாத நள்ளிரவு நேரத்தில், மக்களை எந்த விதத்திலும்
தயார் செய்யாத நிலையில் வினாடிக்கு 50000 கனஅடி
நீரைத் திறந்து விட்ட தமிழக அரசின் பொதுப்பணித்துறையே
ராணுவத் தளபதி தம்பதியினரின் சாவுக்குக் காரணம்.
நள்ளிரவில் எந்த முன்னெச்சரிக்கையும் இன்றி ஏரிநீரைத்
திறந்து விடுபவனின் பெயர் என்ஜீனியர் அல்ல; கொலைகாரன்.
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக