திங்கள், 14 டிசம்பர், 2015

மொழியானது தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறது.
இயங்கும்போதே மாறிக் கொண்டும் இருக்கிறது. எந்த மொழி
தொடர்ந்து இயங்கவில்லையோ, அந்த மொழி செத்துப் 
போய் விடுகிறது.ஆக, மொழிக்கு இயக்கம் இன்றியமையாதது.
**
நாற்றம் என்ற சொல் நறுமணம் என்ற பொருளில்தான் நீண்ட
காலம் வழங்கி வந்தது. "பொன்மலர் நாற்றம் உடையது போல"
என்று ஒரு பழமொழியும் தமிழில் உண்டு. இதன் பொருள்
"பொன்னால் செய்த ஒரு பூவானது  நறுமணத்தையும்
பெற்றது போல" என்பது இதன் பொருள்.
(இஃது இல்பொருள் உவமை) 
**
"நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்" என்கிறார்
ஆண்டாள் திருப்பாவையில். ஈண்டு நாற்றத் துழாய்
என்பதன் பொருள் நறுமணம் மிக்க துளசி என்று பொருள்.
**
ஆக, அண்மைக்காலம் வரையில், நாற்றம் என்பது
நறுமணம் என்ற பொருளில் வழங்கப் பட்டது என்பதை அறிக.
காலப்போக்கில் மொழியின் இயக்கத்தினூடாக, நாற்றம்
எனும் சொல் கெட்ட நாற்றத்தைக் குறிக்கும் சொல்லாக
மாற்றம் அடைந்து, பின் அதுவே நிலைபெற்று விட்டது.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக