வெள்ளி, 18 டிசம்பர், 2015

தனியார்மயம் கொண்டுவரப்பட்டதன் பல காரணங்களில்
தொழிலாளர் ஒற்றுமையைச் சீர்குலைப்பது என்பதும் ஒன்று.

பின்நவீனத்துவக் கூட்டம் பெரும் சமூக விரோதிக் கூட்டம் ஐயா

"அடக்குமுறையின் இடுப்பொடிக்கும்" என்று முதல் கோஷம்
நான் முழங்கினாலும், திருப்பிச் சொல்பவர்கள்
"தொப்பியின் இடுப்பொடிக்கும்" என்றே கோஷம் இடுவார்கள்.
இங்கு தொப்பி என்பது பாசிச சேடிசக் கோமாளி
ராமச்சந்திர மேனனைக் குறிக்கும். 


என்ன செய்ய, காலத்தின் கோலம்!


பின்னாட்களில் எங்கள் தொலைதொடர்புத் துறையில்
தனியார்மயம் அனுமதிக்கப் பட்டது. தனியார்மயம்
கொண்டுவரப் பட்டதற்குப் பல காரணங்கள் உண்டு.
அதில் ஒன்று: தொழிலாளர்களின் ஒற்றுமையைக்
குலைக்க வேண்டும் என்பது. அரசு நினைத்த படியே,
இன்று தனியார்மயம் வந்த பிறகு, மிகப்பல
சங்கங்கள் தோன்றி விட்டன. வர்க்க ஒற்றுமை
சீர் குலைந்து விட்டது.
CPI, CPM, CPI ML ஆகிய மூன்று கட்சியினரும்
ஒரே சங்கத்தில் இருந்த அந்தப் பொற்காலம்
இன்று பழங்கதையாய்ப் போனதே, அய்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக