செவ்வாய், 15 டிசம்பர், 2015

பெருவழக்கு என்பது ஒரு மொழியைப் பேசும்
வெகுமக்கள் அனைவராலும் பயிலப்பெறும் வழக்காகும்.
இந்தப் பெருவழக்கே ஒரு மொழியை உயிர்ப்புடன்
வைத்திருக்கிறது, மொழி இறந்துபடாமல் காப்பது
இப்பெருவழக்கே ஆகும்.
**
இலக்கிய வழக்கில் சொற்கள் புதுப்பொருள் கொள்ளும்.
உரைநடை வழக்கில் ஒரு பொருளைத் தரும் சொல்லானது
செய்யுள் வழக்கில் வேறொரு பொருளைச் சுட்டும் வண்ணம்
அமைத்தலும் உண்டு. மேலும் ஆகுபெயர். அன்மொழித்தொகை
ஆகிய அமைப்புகளும் தமிழில் உண்டு.
**
"அந்தப் பச்சைச் சுடிதார் என்னப் பாத்துச் சிரிக்கிறாடா"
என்ற கூற்றை நாம் அன்றாடம் கேட்டிருக்கிறோம்.
இங்கு "பச்சைச் சுடிதார்" என்ற சொல் ஆடையைக்
குறிக்கவில்லை. அந்த ஆடையை அணிந்த பெண்ணைக்
குறிக்கிறது. இங்கு 'பச்சைச் சுடிதார்" என்ற சொல்லில்
"அணிந்த பெண்" என்பது தொக்கி நிற்கிறது. (தொக்கி
நிற்றல் = மறைந்து நிற்றல், தொக்கி நிற்பதால் அது தொகை)
இஃது தமிழ் இலக்கணத்தில் அன்மொழித்தொகை
எனப்படுகிறது.
**
பச்சைச் சுடிதார் என்ற சொல்லுக்கு, பெண் என்று
பொருள் அன்று. ஆயினும் அன்மொழித்தொகையானது
அப்பொருளைத் தருகிறது.
**
1) இலக்கணம் 2) இலக்கியம் ஆகியவற்றுடன் 3)மொழியியல்
4) சொற்பொருளியல்(semantics) ஆகியவற்றையும் கற்பதன்
மூலமே மொழியின் கட்டுமானத்தை, இயக்கத்தைப்
புரிந்து கொள்ள இயலும்.       
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக