வியாழன், 17 டிசம்பர், 2015

பின்நவீனத்துவம் பேரரசியல் செய்வதில்லை. எனவே
அதற்கு அமைப்பு தேவையில்லை. பி.ந  நுண்ணரசியல்
மட்டுமே செய்யும். இதைக் கண்டறிவது சுலபம் அல்ல.
ஆனால், பி.ந தன்  பெயரில் அல்லாமல் அடையாள
அரசியலின் பெயரால் பல்வேறு அமைப்புகளை உருவாக்கும்.
**
இரண்டாம் உலகப் போருக்குப்பின், 1960 காலக்
கட்டத்தில்தான் பி.ந தோன்றியது. பாசிசம், நாசிசம்
ஆகிய சர்வாதிகாரத் தத்துவங்களுக்கு எதிராக உருவாகி
இருந்த உலகளாவிய மனநிலை, பி.ந முன்வைக்கும்
தடையற்ற கருத்து சுதந்திரம், தனிமனித உரிமை ஆகிய
கருத்துக்களைச் சுலபமாக ஏற்றுக் கொண்டது.
**
மார்க்சியம் மட்டுமே பி.ந. வை கருத்துக் களத்தில்
சந்தித்து முறியடித்து வருகிறது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக