வியாழன், 31 டிசம்பர், 2015

தர்மப் பிரபு 'மார்க் சக்கர்பெர்க்'கின் Free Basics திட்டமும்
எருமை மாட்டின் மீது பெய்த மழையும்!
--------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
முகநூல் நிறுவனத்தின் அதிபர் மார்க் சக்கர்பெர்க்  
ஏழை இந்தியர்கள் மீது பெருங்கருணை கொண்டு
தமது உலகளாவிய திட்டமான Free Basics திட்டத்தை
இந்தியாவில் செயல்படுத்த முன்வந்துள்ளார்.

ஆனால் இந்தியாவின் அறிவுஜீவிகளும் விழிப்புணர்வு
மிக்க இணையக் குடிமக்களும் (netizens) Free Basics திட்டம்
இணைய நடுநிலைக்கு எதிரானது என்று கண்டனம்
தெரிவிக்கிறார்கள். இதனால் தர்மப் பிரபுவான மார்க்
சஞ்சலம் அடைந்துள்ளார். இந்தியத் தொலைதொடர்பு
ஆணையம் (TRAI) Free Basics திட்டத்துக்குத் தடை விதித்து
விடுமோ என்று மார்க் அஞ்சுகிறார்.

எனவே தமது திட்டத்தின் மேன்மையை விளக்கியும்
அதனால் விவசாயிகள் உட்பட ஏழை இந்தியர்கள்
எப்படியெல்லாம் பயன் அடையப் போகிறார்கள் என்பதை
விளக்கியும் ஆங்கில நாளிதழ்களில் முழுப்பக்க விளம்பரம்
கொடுத்துள்ளார். TRAI  தலைவர் ராம் சேவக் சர்மா
அவர்களுக்கும் தமது திட்டத்தை அனுமதிக்குமாறு
கோரி இணையக் கையெழுத்து இயக்கமும் நடத்தி
உள்ளார்.

Free Internet வழங்கினால் மட்டுமே அது இலவசம் என்று
பொருள்படும்.Free Basics என்பது Free Internet அல்ல. மார்க்
வழங்கும் இலவசத்தில் வீடியோ தளங்கள் கிடையாது.
VoIP கிடையாது (Voice over Internet Protocol). இன்னும் நிறைய
தளங்கள் அல்லது சேவைகள் கிடையாது. எனவே இதை
எப்படி இலவசம் என்று சொல்ல முடியும்? "இலவசம்"
என்ற பெயரில் எதைத் தருவது என்பதையும்
எதை எல்லாம் மறுப்பது என்பதையும் முகநூல்
நிறுவனம் முடிவு செய்யும். எனவே இதில் FREE என்பது
இல்லை. FRAUD மட்டுமே இருக்கிறது.

TRAI நிறுவனம் மார்க்கின் Free Basics என்னும் மோசடித்
திட்டத்தைத் தடை செய்ய வேண்டும். தடை செய்யாமல்
அனுமதித்து விட்டால் என்ன ஆகும்? Digital Divide என்னும்
மாபெரும் சாதிப்பிரிவினை உருவாகும். இணையத்தைப்
பயன்படுத்துவோர் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்
படுவர். கட்டணம் செலுத்துவோர், இலவசமாகப்
பெறுவோர் என்று இரு பிரிவினர் உருவாகி விடுவர்.
வர்க்க பேதம், சாதி பேதம் போல இணையப் பயனாளிகள்
இரண்டாகப் பிரிந்து விடுவர். இந்தப் பிரிவினை சமூக,
அரசியல் தளங்களில் பெரும் பிளவை உண்டாக்கும்.

எனவே மார்க்கின் Free Basic திட்டத்தை உறுதியுடன் போராடி
முறியடிக்க வேண்டும். ஹைதராபாத் நகரில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட  நெட்டிசன்கள் பொறியியல் மாணவர்கள்,
மென்பொருள் பணியாளர்கள் உட்பட. டிசம்பர் 29, 2015
அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி
மார்க்கைக் கதிகலங்கச் செய்தனர்.

மென்பொருள் தலைநகரான பெங்களூருவில் நெட்டிசன்கள்
மார்க்கிற்கு எதிராக கண்டன இயக்கத்தை நடத்தி
வருகின்றனர். பல்வேறு ஐ.ஐ.டி.களைச் சேர்ந்த
பேராசிரியர்களும் மாணவர்களும் இணைய நடுநிலையைப்
பாதுகாக்கக் கோரியும், மார்க்கின் இலவச மோசடித்
திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரியும் இயக்கம்
நடத்தி வருகின்றனர்.

ஆனால், அடையாள அரசியலின் தலைமைச் செயலகமாகத்
திகழும் தமிழ்நாட்டில், எப்போதும் போலவே எருமை
மாட்டின் மீது மழை பெய்தது போல, தமிழக இணையப்
பயனாளிகளில் பலரும் இருக்கின்றனர். சாதிய, மத,
தேசிய இன அடையாள அரசியலையும் போலித் தமிழ்ப்
பற்றையும்  பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் தமிழ்
மூடர்களுக்கு இணைய நடுநிலை பற்றியெல்லாம் எந்தக்
கவலையும் கிடையாது.

நன்று அறிவாரில் கயவர் திருவுடையார்
நெஞ்சத்து அவலம் இலர். ----திருக்குறள்-------
*********************************************************************    
    .    


       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக