வெள்ளி, 11 டிசம்பர், 2015

சென்னை வெள்ள சேதத்திற்கு எல் நினோ காரணமா?
---------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
எல் நினோ என்பது இயற்கையான ஒரு வானியல் நிகழ்வு.
பசிபிக் பெருங்கடலின் நீர்ப்பரப்பு சூரிய வெப்பம் காரணமாகச்
சூடேறும்போது. இந்தச் சூடேற்றம் வானிலையில் மாற்றங்களை
ஏற்படுத்துகிறது. இந்நிகழ்வே எல் நினோ எனப்படுகிறது.
(எல் நினோ குறித்த குறைந்தபட்சப் புரிதலை மட்டுமே
மேற்கூறிய விளக்கம் தருகிறது என்பதை ஓர்க).

சென்னையில் நவம்பர் 2015 இறுதியில் பெய்த பெருமழைக்கு
எல் நினோதான் காரணம் என்கின்றனர் சிலர். எவ்வாறு
எல்நினோ காரணமாக அமைந்தது என்பது பற்றி இவர்கள்
எதுவும் கூறவில்லை.

எல்நினோ நிகழ்வு இவ்வாண்டில் தோன்றுமா என்பதே
ஐயத்துக்கு இடமாக இருந்தது. ஏனெனில் எல்நினோ என்பது
ஆண்டுதோறும் தவறாமல் ஏற்படும் நிகழ்வு அல்ல. கடைசியில்
இவ்வாண்டு மார்ச்-ஏப்ரலில் மிகவும் பலவீனமான எல்நினோ
தொடங்கி உள்ளது என்று விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

எல்நினோ தனது முழு ஆற்றலுடன் செயல்படத் தொடங்குவது
டிசம்பர்-ஜனவரி மாதத்தில்தான். அதிலும் குறிப்பாக
டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமசை ஒட்டியே எல்நினோ
வலுவடையும்; தனது இருப்பை உணர்த்தும்.

அப்படியிருக்க, நவம்பர் மாதத்தில் சென்னையில் பெய்த
பெருமழைக்கு எல்நினோ எவ்வாறு காரணம் ஆகும்?

பசிபிக் பெருங்கடலில் தோன்றும் இந்த எல்நினோ நிகழ்வு
தென் அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரை தீவிரமான
பாதிப்பை ஏற்படுத்தும். இந்தோனேசியா தாண்டி இந்தியப்
பெருங்கடல் பக்கம் வருகிறபோது, அதாவது இந்தியா பக்கம்
வருகிறபோது பலவீனமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இதுதான் உண்மை. எனவே சென்னையில் கடலூரில் 2015
நவம்பரில் ஏற்பட்ட பெருமழைக்கு எல்நினோ எவ்வாறு
காரணமாக அமையும்?

எல்நினோ குறித்து உளறுவோர் பதிலளிக்க வேண்டும்.
***************************************************************     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக