செவ்வாய், 15 டிசம்பர், 2015

அருள்கூர்ந்து வாசகர்களுக்குத் தவறாக வழிகாட்ட வேண்டாம்.
ஆகுபெயர் அன்மொழித்தொகை இவை இரண்டுக்கும் பெரிய
வேறுபாடு உண்டு. ஆகுபெயரின் இலக்கணம் வருமாறு:-
"ஒன்றன் பெயரால் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே".
**
பச்சைச் சுடிதார் என்பது அன்மொழித்தொகையே அன்றி,
ஆகுபெயர் அன்று. பச்சைச் சுடிதார் என்பது பெண்ணுக்கு
ஆகி வருகிறது என்பது முற்றிலும் தவறு.
**
"ஆகுபெயருக்கும் அன்மொழித்தொகைக்கும் உள்ள வேறுபாடு
என்ன?" என்ற வினா ஒன்பதாம் வகுப்புப் பாடத்திலேயே
இடம் பெற்றுள்ளது. அருள்கூர்ந்து திரு அருண்முல்லை
அவர்கள் அதனைப் படித்துப் பார்க்கவும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக