வியாழன், 17 டிசம்பர், 2015


ஊடகத்துறை இளைஞர்கள் ஒன்றைப் புரிந்து
கொள்ள வேண்டும். உங்களுக்கும் இளையராஜாவுக்கும்
ஒரு தலைமுறை இடைவெளி இருப்பதை நீங்கள் புரிந்து
கொள்ள வேண்டும்.
**
இளையராஜா ஒரு அரசியல்வாதி அல்ல.
செய்தியாளர்கள் கேட்கும் தர்மசங்கடமான கேள்விகளைச்
சமாளிப்பதில் அரசியல்வாதிகள் திறமையானவர்கள்.
இளையராஜாவிடம் அத்தகைய திறமை எதுவும் கிடையாது.
அவருக்கு அது தேவையும் இல்லை.
**
அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுகிறார்கள்.
இது மக்களாட்சி என்பதால், மக்களின் சார்பாகக் கேள்வி
கேட்கும் ஊடகவியலாரின் கேள்விகளுக்குப் பதில்
சொல்லக் கடமைப் பட்டவர்கள். ஆனால் இளையராஜா
அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. அவர் இசையின்
பிரதிநிதியே தவிர, மக்களின் தேர்ந்தெடுக்கப் பட்ட
பிரதிநிதி அல்ல; அதாவது MLA,MP, அமைச்சர் அல்ல.
**
எனவே, இடம்-பொருள்-ஏவல் குறித்தெல்லாம் கவலைப்
படாமல், தலைமுறை இடைவெளி குறித்தெல்லாம்
கவலைப் படாமல் அரசியல்வாதி அல்லாத ஒரு
இசைக் கலைஞரிடம் ஆத்திரமூட்டும் விதத்தில்
கேள்வி கேட்பதை இளைஞர்கள் தவிர்க்கலாமே.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக