செவ்வாய், 29 டிசம்பர், 2015

ஆயர்கள் கடும் உடல் உழைப்பாளர்கள். இயற்கையோடு இயைந்த
வாழ்வு வாழ்ந்தவர்கள். எஃகு நிகர் உடல் வலிமை வாய்ந்தவர்கள்.
ஒரு குடம் பாலை இயல்பாக அருந்தக் கூடியவர்கள்.
இலைச்சோற்றை மூடும் அளவுக்கு நெய் பெய்து உண்பது
அன்று இயல்பு. இதில் மிகை எள்ளளவும் இல்லை. ஆண்டாளின்
படைப்புகள் உலகப் பெரும் இலக்கியங்களில் இடம் பெற்றவை.  



பெரிய புராணம் காவியம் அன்று. கம்ப ராமாயணம்
ஒரு காவியம் ஆகும். தமிழ்நாட்டில் வள்ளுவர்,
இளங்கோ, கம்பன், ஆண்டாள் போன்று சேக்கிழார்
(பெரியபுராணம்) பரவலாகப் படிக்கப் படவில்லை.


 தோழரே,   பானு அம்மையார்   அன்று பொய் சொல்லவில்லை.
பேசப்பட்ட பொருளைப் பற்றி அவருக்குத் தெரிந்தது
அவ்வளவுதான். அவர் தமது அறியாமையை வெளிப்படுத்தி
உள்ளார். சட்டியில் இருப்பதுதானே அய்யா அகப்பையில்
வரும். தங்களைப் போன்றவர்கள் அவரைப் பெரிய
அறிவாளி என்று கருதுவதற்கு அவர் எங்ஙனம் பொறுப்பாவார்?    



பொதுவாக புத்தகங்களைப் படிப்போரை மூன்று பிரிவினராகக்
கருதலாம்.1) திறனாய்வு நோக்குடன் படிக்கும் திறனாய்வாளர்,
ஆய்வாளர் ஆகியோர். 2) முதிர்ந்த வாசகர்கள் 3) எளிய வாசகர்கள்.
இவற்றில் (1) மற்றும் (2) பிரிவுகளில் உள்ளோர் மட்டுமே
பதிப்பாளர் யார் என்பதையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம்
உடையவர்களாய் இருப்பர். எளிய வாசகர்களிடம் போய்,
பதிப்பாசிரியர் யார் என்றெல்லாம் கேட்டால் அவர்களிடம்
பதில் இருக்காது. இது மிகவும் இயல்பான ஒன்றே.
**
ஒரு புத்தகத்தை ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ பதிப்பகம்
 பற்றிய அறிவைப் பெற்று இருக்க வேண்டும் என்று
முன்நிபந்தனை விதிப்பது ஏற்கத் தக்கதன்று. டி.வி
விவாதத்தில் பங்கேற்போர் இலக்கியத் திறனாய்வாளர்களாக
இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே அபத்தமானது.
**
ஒரு புத்தகம் பற்றிய திறனாய்வு வேறு. அப்புத்தகம்
பற்றிய வெகுஜன அபிப்பிராயம் வேறு.
**
  நிகழ்ச்சியின் நெறியாளர் விவாதிக்க வந்துள்ளோரிடம்
புத்தகத்தைப் பற்றிப் பல கேள்விகள் கேட்டு, அவர்களை
அம்பலப் படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கி
உள்ளீர்கள். இதில் எவ்விதமான அம்பலப்படுத்தலுக்கும்
அவசியமே இல்லை. விவாதிக்க வந்துள்ளோர் யாரும்
தங்களை இலக்கியத் திறனாய்வாளர் என்றோ, ஏன்,
இலக்கிய வாசகர் என்றோகூட உரிமை கோரவில்லை.
**
When they unhesitatingly plead their ignorance, where is the need for an
exposure?
**
அடுத்து, பல கேள்விகளைக் கேட்டு, விவாத நெறியாளர்
அவர்களை அம்பலப் படுத்த வேண்டும் என்கிறீர்களே,
அய்யா, விவாத நெறியாளர்கள் எல்லோரும்
இலக்கியங்களைக் கற்றுத் துறை போகிய அறிஞர்களா?
அப்படி ஒருவரைக் காட்ட இயலுமா தங்களால்?
**
நெறியாளர்களில் தோழர் நிஜந்தன் மட்டுமே இலக்கியவாதி.
மற்ற அனைவருக்கும் இலக்கிய வாசிப்பு என்பது சராசரிக்கும்
வெகு குறைவே.          
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக