செவ்வாய், 29 டிசம்பர், 2015

திரு அபிலாஷ் சந்திரன் அவர்களுக்கு,
------------------------------------------------------------
மறைந்த எழுத்தாளர் சுஜாதா பல ஆண்டுகளுக்கு முன்பு,
குமுதத்தில் ஒரு தொடர்கதை எழுதினர். சிப்பாய்க் கலகம்
(1857) என்று அழைக்கப் படும் முதலாம் இந்திய சுதந்திரப் போர்
பற்றிய தொடர்கதை அது. அதில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைக்
குறிக்க மக்கள்  மத்தியில் புழங்கும் ஒரு வழக்குச் சொல்லைப்
பயன்படுத்தி இருந்தார். இதில் எவ்விதத் தவறும் இல்லை.
எந்த இலக்கியக் கோட்பாட்டால் அளந்தாலும் இதில்
எவரும் தவறு காண முடியாது.
**
ஆனால் அந்த சமூகப் பிரிவினர் பெரும் எதிர்ப்பைக்
காட்டினர். குமுதம் தொடரை நிறுத்தி விட்டது. அப்போது
சுஜாதா பெங்களூரில் இருந்ததால் அவரின் தலை தப்பியது.
சுஜாதாவுக்கு என்ன நீதி கிடைத்தது அன்று? Nothing!
**
சுஜாதாவை எதிர்த்து, வீதிக்கு வந்து கலவரம் விளைத்த
அந்தக் குழுவினர் எவரேனும் சுஜாதா எழுதிய அறிவியல்
கட்டுரைகளை, நூல்களை வாசித்து இருப்பார்களா?
இல்லை. a plus b whole squared என்றால் கூட என்னவென்றே
பரம்பரை பரம்பரையாகத் தெரியாத கூட்டம்தான் அன்று
 ரணகளப் படுத்தியது.
**
ஆக, ஒரு நூலுக்கு எதிரான வெகுஜன அபிப்பிராயத்தை
ஏற்படுத்துவது எளிது. அது எவ்விதத்திலும் நூல் திறனாய்வு
ஆகாது. " இந்தியாவில் 200 ரூபாய் ஒருவனிடம் இருந்தால்
போதும்; அவன் நினைத்தால் மதக் கலவரத்தை உண்டாக்கி
விடலாம்"என்றார் மார்க்கண்டேய கட்ஜு. அது எவ்வளவு
கச்சிதமாகப் பொருந்துகிறது பாருங்கள்.
 .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக