சனி, 12 டிசம்பர், 2015

ஐ.நா கூறுவது என்ன? நாம் கூறியது என்ன?
----------------------------------------------------------------------------
ஐ.நா அறிவித்துள்ள எல்நினோ பாதிப்பு 2016 ஜனவரி-பிப்ரவரி
மாதங்களில் ஏற்படக் கூடும். அதாவது இனிமேல் ஏற்பட
இருக்கும் பாதிப்பு பற்றி ஐ.நா.வின் அறிக்கை கூறுகிறது.
நமது கட்டுரை நவம்பர் 2015-டிசம்பர் 1 காலத்தில் ஏற்கனவே
ஏற்பட்ட அதிக மழைப்பொழிவு பற்றிக் கூறுகிறது.
இதற்கு எல்நினோ காரணம் அல்ல என்பதே உண்மை.
இதைத்தான் எமது கட்டுரை கூறுகிறது.
**
எல்நினோ தன்னுடைய முழு ஆற்றலுடன் செயல்படுவது
டிசம்பர் 25, 2015 முதல் ஜனவரி-பிப்ரவரி  2016 வரை. இதை
எமது கட்டுரை தெளிவாகக் குறிப்பிடுகிறது. இதையே ஐ.நா
அறிக்கையும் கூறுகிறது. எனவே எமது கட்டுரைக்கும் ஐ.நா
அறிக்கைக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை.
**  
இன்னொன்று. ஐ.நா.வின் அறிக்கை long range prediction
வகையைச் சார்ந்தது. குறிப்பான நிலைமைக்கு அதை
அப்படியே பொருத்துவது தவறு. அதாவது சென்னை மற்றும்
கடலூரில் நவம்பர் 2015 மற்றும் டிசம்பர் முதல் வாரத்தின்
மழைப்பொழிவுக்கு எல்நினோதான் காரணம் என்று
வரையறுப்பது தவறு. ஐ.நா.வும் அப்படி வரையறுக்கவில்லை.
இதுதான் உண்மை. ஆனால் ஐ.நாவின் அறிக்கையை மேலெழுந்தவாரியாகப் படித்துவிட்டு, அதைத் தவறாக
வியாக்கியானம் செய்வதை (interpreting wrongly) எமது
கட்டுரை கண்டிக்கிறது.
**
Weather, Climate ஆகியவை இடம், காலம் ஆகியவற்றைப்
பொறுத்து மாற்றம் அடைபவை. Therefore the forecast should be
time-specific and space-specific.
.....இளங்கோ, நியூட்டன் அறிவியல் மன்றம்........
---------------------------------------------------------------------------------------------------    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக