சனி, 19 டிசம்பர், 2015

சனிக் கிழமைகளில் பள்ளிகளை நடத்தக் கூடாது!
விடுமுறை விட வேண்டும்: மருத்துவர் ராமதாஸ்!
--------------------------------------------------------------------------------
பின்னர் போர்ஷனை எப்படி முடிப்பது மருத்துவரே!
1950களில் SSLC, இண்டர்மீடியட், MBBS என்று
நீங்கள் படித்த காலமா இன்று இருக்கிறது?
இது 2015.

English Grammar தெரியாதலால், தாங்கள் படித்த
முத்தியால்பேட்டை பள்ளி வாத்தியாரிடம் தாங்கள்
பிரம்படி வாங்கி இருக்கக் கூடும். தாங்களும் அதை
இயல்பானதாக எடுத்துக் கொண்டிருக்கக் கூடும்.

இன்று அப்படியா? வாத்தியாரை தேசியப் பாதுகாப்புச்
சட்டத்தில் உள்ளே வைத்து விடுவார்களே அய்யா!

போர்ஷனை முடிக்கவில்லை என்றால் வாத்தியாரை
DEO சஸ்பெண்டு செய்து விடுவாரே அய்யா!
காலத்தை உணர்ந்து பேசுங்கள் பெரியவரே!
****************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக