மழை வெள்ளம்: எங்கள் அனுபவம்
பாதுகாப்பாக உள்ளோம்!
-----------------------------------------------------------
டிசம்பர் 1 ( செவ்வாய்) மாலை 6.30 மணிக்கு சென்னை கடற்கரை
ரயில் நிலையத்தில் இறங்கினேன். சத்யம் டி.வி நடத்தும்
மழை வெள்ள பாதிப்பு குறித்த விவாதத்தில் (இரவு 7 to 8) பங்கேற்று
முடித்து, டி.வி.நிலையத்தாரின் காரில் ஏறி சென்னை கடற்கரை
ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன்.அப்போது மணி இரவு 8.30.
புறநகர் ரயில்கள் யாவும் ரத்து செய்யப்பட்டன. பின்னர்
பெருங்கஷ்டத்துடன் நடந்தும் பேருந்து மூலமும் அண்ணா ஆர்ச்
அருகில் வந்து இறங்கி, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து
இரவு 11.30 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.
மின்சாரம் முற்றிலிலும் துண்டிப்பு. மொபைல் மற்றும்
நிலவழித் தொலைபேசி வேலைசெய்யவில்லை. செய்தித்தாள்கள்
கிடைக்கவில்லை. நான் வாழும் பகுதியைச் சுற்றிலும் உள்ள
ஊர்கள் ஏரிநீர் திறந்து விடப்பட்டமையால் அரைகுறையாக
மூழ்கிக் கிடந்தன. எங்கள் பகுதி மேட்டு நிலம் என்பதால்
தண்ணீர் முற்றுகை இடவில்லை.
இன்று 03.12.2015 சற்று முன்புதான், (மதியம் 1 மணி) மின்சாரம்
வந்தது. மொபைலுக்கு சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கிறேன்.
நல்வாய்ப்பாக BSNL பிராட்பேன்ட் வேலை செய்வதால்,
இப்பதிவை எழுதி வெளியிட முடிகிறது.
************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக