எய்தவர் அ மார்க்ஸ்! அம்பு சிலம்பரசன்!
எய்தவரை வீழ்த்துவோம்! அம்பை முறிப்போம்!
-------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-----------------------------------------------------------------------------------
சர்வ நிச்சயமாக நடிகர் சிலம்பரசன் எழுதியும் பாடியும்
உள்ள கெட்ட வார்த்தைப் பாடல் அருவருத்து ஒதுக்கப்பட
வேண்டியது என்பதும், அதைப் பாடிய சிலம்பரசன் மற்றும்
இசையமைத்த திரு அனிருத் ஆகிய இருவரும் சமூகத்தின்
வன்மையான கண்டனத்துக்கு உரியவர்கள் என்பதும்
எவராலும் மறுக்க இயலாதவை.
அதே நேரத்தில் சிம்புவுக்குக் கண்டனம் என்ற பெயரில்
சமூகத்தின் உளவியலில் எத்தகைய தாக்கத்தையும்
ஏற்படுத்த இயலாத பல்வேறு நிகழ்வுகள் போராட்டங்கள்
என்ற பெயரில் நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாகப் பெருகிக் கொண்டிருப்பது ஏற்கத்
தக்கதல்ல.
ஏனெனில், பெண்ணிய மற்றும் அபெண்ணிய அமைப்புகளின்
குட்டி முதலாளித்துவ ஆர்வலர்களால் எத்தகைய புரிதலும்
இன்றி நடத்தப் பெறும் இத்தகைய நிகழ்வுகள் விரும்பிய
விளைவு எதையும் தரப்போவதில்லை.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதீர்க்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்ற அறிவுடைமை சிம்புவின் எதிர்ப்பாளர்களிடம்
துளியும் இல்லை.
சிம்புவின் பாடல் என்பது பின்நவீனத்துவம் என்ற மிகப்பெரிய
ராட்சத நச்சு மரத்தின் ஒரு பிஞ்சு. சிம்புவை விட ஆயிரம்
மடங்கு குற்றவாளி பின்நவீனத்துவமே. சிம்புவை முடக்கி
விடலாம். ஆனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான
சிம்புகளை உருவாக்க வல்லது பின்நவீனத்துவம்.
கொசுக்கள் இருக்கின்றன என்றால் அதற்கு மூல
காரணமான சாக்கடையை ஒழிக்க வேண்டும். அதை
விட்டு ஒவ்வொரு கொசுவாகக் கையால் தட்டித் தட்டி
ஒழிக்கலாம் என்பது மூடத்தனமே.
சிம்பு எதிர்ப்பாளர்கள் அனேகமாக அனைவருமே
பின்நவீனத்துவம் என்ற ஒன்று இருப்பதையே
அறியாதவர்கள். இவர்களில் பலரும் தங்களை
அறியாமலேயே தங்களிடமும் பின்நவீனத்தின்
கூறுகள் படிந்து இருப்பதைக் காண இயலாதவர்கள்.
இதற்குக் காரணம் உண்டு. பின் நவீனத்துவம் எப்போதுமே
நுண்ணரசியல் மட்டுமே செய்யும். அது மார்க்சியத்தைப்
போல் பேரரசியல் செய்வதில்லை. மேலும் மார்க்சியம்
தன கொள்கைகளைப் பரப்ப பல்வேறு அமைப்புகளை,
கட்சிகளை உருவாக்கும். ஆனால் பின் நவீனத்துவம்
எந்த அமைப்பையும் கட்டாது. அமைப்பு கட்டுதல்
என்ற கோட்பாட்டுக்கே பின்நவீனத்துவம் எதிரானது.
சுருங்கக் கூறின், பின்நவீனத்துவம் subtle manoeuvring செய்யும்.
தமிழகத்தில் மார்க்சியத்தைப் பரப்பியவர்கள் யார் என்ற
கேள்விக்குப் பலரும் விடை சொல்ல முடியும். ஆனால்
தமிழகத்தில் பின்நவீனத்தை அறிமுகம் செய்தவர்கள்
யார், பரப்பியவர்கள் யார் என்ற கேள்விக்கு, பரந்துபட்ட
மக்களிடம் விடை கிடையாது.
1) பேராசிரியர் அ மார்க்ஸ்
2) ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
3) பேராசிரியர் ராஜ் கௌதமன்
ஆகிய மூவரும்தான் தமிழகப் பின்நவீனத்துவத்தின்
பிதாமகர்கள். சிம்புவின் கெட்டவார்த்தைப் பாடல்
உருவாக வழி சமைத்தவர்கள் இவர்கள் மூவருமே.
இவர்கள் முற்போக்கு வேடம் தரித்துக் கொண்டு
திரிவதும், சிம்பு மட்டும் அடிவாங்குவதும் என்ற நிலை
ஏற்புடைத்தன்று.
கெட்ட வார்த்தை, நல்ல வார்த்தை என்று வார்த்தைகளைப்
பிரிக்கக் கூடாது; கெட்ட வார்த்தைகளிடம் தீண்டாமை
கடைப்பிடிக்கக் கூடாது என்பதுதான் பின்நவீனத்துவம்
முன்வைக்கும் மொழிக் கோட்பாடு. மேலும் குழுப்
புணர்ச்சி உட்பட சகல விதமான புணர்ச்சிகளையும்
(wild mating, mating of animals by humans etc) பின்நவீனத்துவம்
ஆதரிக்கிறது.
பின்நவீனத்துவத்தைக் களத்தில் சந்தித்து முறியடிக்கா
விட்டால், அடுத்து சிம்பு போன்றவர்கள் குழுப்புணர்ச்சி
வீடியோ ஆல்பங்களைத் தயாரிப்பதும் அது முகநூலில்
வெளியிடப் படுவதும் நிகழும்.
பின்நவீனத்துவத்தை முறியடிக்கும் வல்லமை பெற்றது
மார்க்சியம் மட்டுமே.
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக