வியாழன், 24 டிசம்பர், 2015

முகிலன் சிறை சென்றார்!
கூடங்குளம் உதயகுமார் சிறைசெல்ல மறுக்கிறார்!
-----------------------------------------------------------------------------------
கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துப் போராட்டங்கள்
நடந்தன. போராடிய மீனவ மக்கள் மீதும் ஆதரவளித்த
பிறர் மீதும் ஜெயா அரசு வழக்குத் தொடர்ந்தது. கூடங்குளம்
மற்றும் அருகிலுள்ள ஊர் மக்கள் மீது நூற்றுக் கணக்கான
வழக்குகளைத் தொடர்ந்து, கோர்ட், வாய்தா என்று
அலைக்கழிக்கிறது ஜெயா அரசு.

உச்சநீதி மன்றம் போராட்டக் காரர்கள் மீதான வழக்குகளை
திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டது. அதன் பேரில், ஜெயா அரசு
பல வழக்குகளைத் திரும்பப் பெற்றது. ஆனால் இன்னமும்
நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் போராட்டக் காரர்கள்
மீது நிலுவையில் உள்ளன.

மாதத்தில் இருபது நாட்கள்  எளிய மக்கள் வாய்தா போடப்பட்ட
வழக்குகளில் நீதிமன்றங்களில் ஆஜர் ஆகிறார்கள். இந்த
அலைக்கழிப்பினால் யாரும் தங்கள் பிழைப்பைப் பார்க்க
முடியவில்லை. இதற்கு முடிவுதான் என்ன? எத்தனை
வருடங்கள் வாய்தாவுக்காக அலைய முடியும்?

உழைக்கும் மக்களை இந்த அலைக்கழிப்பில் இருந்து விடுதலை
செய்ய வேண்டும்; தங்கள் பிழைப்பைப் பார்க்க முடியாமல்,
நீதிமன்றங்களின் நெடிய தாழ்வாரங்களில் தங்களின்
வாழ்வாதாரமான உழைப்பை இழக்கும் எளிய மக்களுக்கு
நிவாரணம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை
மேலெழுந்தது. இது எளிய மக்களின் நியாயமான கோரிக்கை.

ஆனால்   போராட்டக் குழுவின் தலைமையில் இருக்கும்
உதயகுமாரும் பாதிரியார் மைபா ஜேசுராஜனும் இந்த
மக்களின் கோரிக்கை குறித்துத் துளியும் அக்கறை
காட்டவில்லை.

எனவே தோழர் முகிலன் அவர்கள் சட்ட நிபுணர்களையும்
மக்களையும் தொடர்புடைய அனைவரையும் கலந்து
ஆலோசித்தார். நீதிமன்றத்தில் சரண் அடைந்து வழக்குகளைச்
சந்திப்பதன் மூலமே, வழக்குகளில் இருந்து விடுதலை
பெற முடியும் என்ற ஏகமனதான முடிவு எடுக்கப் பட்டது.

அந்த முடிவைச் செயல்படுத்தும் நோக்கில், தோழர் முகிலன்
நேற்று (23.12.2015) திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

ஆனால், மக்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்திய உதயகுமாரும்
மை பா ஜேசுராஜனும்  மக்களின் துன்பதுயரங்களின் மீது
பாராமுகமாக இருக்கிறார்கள். அவர்கள் சொகுசுவாசிகள்.
அவர்கள் ஒருநாளும் சிறைக்குச் செல்ல மாட்டார்கள்.

அமெரிக்க மற்றும் சி.ஐ.ஏவின் ஆதரவு இருப்பதால்
சர்வ வல்லமை வாய்ந்த ஜெயாவே உதயகுமாரைக்
கைது செய்ய முடியாது. கூடங்குளம் போராட்டம்
வருடக் கணக்கில் நடந்த போதும், உதயகுமார்
ஒருநாள் கூடக் கைது செய்யப் படவில்லை என்பதை
வாசகர்கள் நினைவு கூரவும்.

தற்போது முகிலன் முடிவெடுத்து சிறைக்குச்
சென்று விட்டார். உதயகுமார்  ஜேசுராஜன் மீது
மக்களின் நிர்ப்பந்தம் வலுத்து வருகிறது. ஆனால்
என்ன நடந்தாலும் இருவரும் சிறை செல்ல மாட்டார்கள்.
மக்களைக் காட்டிக் கொடுப்பார்கள்.
***************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக