சனி, 19 டிசம்பர், 2015

ஊடக விடலையும் இசைஞானியும்!
சகிப்புத் தன்மை என்பது ஒருவழிப்பாதை அல்ல!
---------------------------------------------------------------------------
"நான் ஏடாகூடமாகக் கேள்வி கேட்டாலும்
ஆத்திரமூட்டும் விதத்தில் கேள்வி கேட்டாலும்
பதில் சொல்பவர் நிதானத்துடனும் பக்குவத்துடனும்
பதில் சொல்ல வேண்டும். இதுதான் சகிப்புத் தன்மை"
என்கிறான் ஊடக விடலை.
**
நல்லது விடலையே, நீ கூறும் சகிப்புத் தன்மை என்பது
ஒருவழிப்பாதை அல்ல. பதில் கூறுபவர் கோபத்துடன்
பதில் கூறினாலும் அதை சகித்துக் கொள்ளும் தன்மை
உனக்கு வேண்டும் அல்லவா?
**
ஊடக விடலையே, சகிப்புத் தன்மை என்பது இருவழிப்
பாதை என நீ உணர்வாயாக. சகிப்புத் தன்மை இல்லாமல் பேசுவது இளையராஜாவின் குற்றம் என்று கூப்பாடு போடும்
ஊடக விடலையே, வள்ளுவரின்  பின்வரும் குறளைப்
படிப்பாயாக.
**
ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு யிர்க்கு.

பிறர் குற்றம் பற்றியே பேசுபவன் தன்  குற்றத்தையும் அறிதல்
வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
******************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக