பகுத்தறிவும் கடவுள் மறுப்பும்!
------------------------------------------------
மனிதர்களை இரண்டு பெரும் பிரிவினராகக் கருதலாம்.
1) கடவுள் ஏற்பாளர்கள் (Theists)
2) கடவுள் மறுப்பாளர்கள் ( Atheists). எவர் ஒருவரும்
கடவுள் ஏற்பாளராகவோ (அல்லது) கடவுள் மறுப்பாளராகவோ
இருக்கலாம்.
தமிழ்ச் சூழலில், பகுத்தறிவாளர் என்ற ஒரு சொல்
பொருள் மயக்கம் தருகிற ஒரு சொல்லாக ஆகிவிட்டது.
ஒட்டுமொத்த மனிதர்களுமே பகுத்தறிவு உடையவர்கள்தாம்.
பகுத்தறிவு என்பது அறிவியல் ரீதியாக ஆறாம் அறிவு
ஆகும். இது விலங்குகளுக்கு இல்லை. ஏனெனில் அவை
ஐந்தறிவு மட்டுமே கொண்டவை. எனவே ஆறாம் அறிவைக்
கொண்டிருக்கிற மனிதர்கள் அனைவருமே
பகுத்தறிவாளர்கள்தான்.
கடவுள் மறுப்பாளராகிய ஒருவர் தம்மைப் பகுத்தறிவாளர்
என்று அடையாளப் படுத்திக் கொள்ளும்போது, அவரின்
அடையாளம் முழுமையாகச் சுட்டப் படுவதில்லை. ஒரு
போதாமை அங்கு வந்து விடுகிறது. எனவே தெளிவு கருதி,
கடவுள் மறுப்பாளர்கள் தங்களை கடவுள் மறுப்பாளர்கள்
என்றே அடையாளப் படுத்துவது நல்லது.
எனினும் கடவுள் மறுப்பாளர்கள் தங்களைப்
பொருள்முதல்வாதிகள் (materialists) என்று அடையாளப்
படுத்திக் கொள்வது சாலச் சிறந்தது.
----------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக