பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல!
------------------------------------------------------------------------------
அறிவு செறிந்த விளக்கம்; எனினும் முழுமையாக ஏற்க
இயலவில்லை. மொழியும் அதன் கட்டுமானமும் அதன்
இலக்கணமும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருப்பவை.
இயக்கத்தின் போக்கில் மாறிக்கொண்டே இருப்பவை.
காலமாற்றத்துக்கு ஏற்றவாறு மொழிகள் தம்மைத்
தகவமைத்துக் கொள்ள வேண்டும். பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல.
**
ரோடு என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழ்ச் சொல்லாகவே
ஏற்று, வேற்றுமை உருபுடன் புணரும்போது, ஒற்று இரட்டித்துப்
புணர்ந்து, "ரோட்டுக்கு" என்ற சொல் இன்று வழக்காகி விட்டது.
**
தொல்காப்பியர் கூறிய நேர்பு நிரைபு போன்ற அசைகள்
இன்று வழக்கில் இல்லை. (இன்றென்ன, முன்பே வழக்கில் இல்லை).
**
மாறுதல் ஒன்றே மாறாதது என்ற மார்க்சின் கூற்று மொழிக்கும்
பொருந்தும். இன்று தட்டச்சு, கணினித் தட்டச்சு உள்ளிட்ட
மின்னணு உலகில் தமிழ் பயன்பட வேண்டும். எனவே சுருக்கம்
என்பது மிகவும் தேவை. விருத்தியுரை எழுதினால் இன்று
எவன் படிப்பான்? காண்டிகை உரை ஏன் சிறப்புப் பெற்றது?
ஏனெனில், மக்கள் சுருக்கத்தை விரும்புகிறார்கள். இது எல்லா
மொழி பேசும் மக்களுக்கும் பொதுவானது. Biscuits என்ற
ஆங்கிலச் சொல்லை ஆங்கில மக்கள் Bikis என்று சுருக்கி
விட்டார்கள்.
**
ஆண்டாள் காலத்து வினையெச்ச வாய்பாடுகள் அனைத்தும்
இன்று வழக்கில் உள்ளனவா? இல்லையே. உவம உருபுகள்தான்
எத்தனை இருந்தன? (போல புரைய ஒப்ப உறழ........ என்பவும்
பிறவும் உவமத்து உருபே). இன்று அவற்றில் பெரும்பாலன
வழக்கு வீழ்ந்தன. ஆனா ஆவன்னா என்கிறோம். இதில் உள்ள
சாரியை இன்று வழக்கில் உள்ளதா? இல்லையே.
**
எனவே, தேவையற்றதாகிப் போன ஒரு அத்துச் சாரியையை
வழக்கு நீக்குவதால் என்ன தீங்கும் நிகழப் போவதில்லை.
காலத்துக்கு ஏற்பத் தமிழை நவீனப் படுத்துவதால், தமிழ்
நீண்டு வாழும் என யான் எண்ணுகிறேன். தங்களைப் போன்ற
தமிழறிஞர்கள் இம்முயற்சிக்கு ஆக்கமும் ஊக்கமும்
தருதல் வேண்டும் என்பதே என் கனிவான வேண்டுகோள்.
**
"ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்போம்!"
(இது அத்துச் சாரியை பெய்து எழுதியது)
அத்துச் சாரியை இல்லாமல் இத்தொடரைப்
பின்வருமாறு எழுதலாம்.
"ஆங்கிலமின் ஆதிக்கமை எதிர்ப்போம்!"
**
காலப்போக்கில் இது நிலை பெற்று விடும். தந்தை பெரியாரின்
எழுத்துச் சீர்திருத்தம் (லை னை னோ .....) அரசாணை
மூலம் நிலை பெற்று விடவில்லையா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக