ஞாயிறு, 6 டிசம்பர், 2015

ஏரியின் மீது வீடு! இது ஒரு ESSENTIAL EVIL!
-----------------------------------------------------------------------
நமது பூமியில் முக்கால் பாகம் தண்ணீர்; கால் பாகம்
மட்டுமே நிலப்பகுதி. நகர்மயமாதல் மற்றும் நகரங்களில்
மக்கள்தொகை அடர்த்தி ஆகியவற்றின் காரணமாக
ஏரிகள் நீர்நிலைகள் ஆகியவற்றின் மீது கட்டடங்கள்
கட்டப் பட்டு இருக்கின்றன. அரசும் தனியாரும் போட்டி
போட்டுக் கொண்டு ஏரிகள் நீர்நிலைகள் மீது கட்டிடங்களைக்
கட்டி விட்டார்கள்.

இது ஒரு ESSENTIAL EVIL (அத்தியாவசியத் தீமை) என்றாகி
விட்டது. ஆனால், இவ்வாறு நீர்நிலைகள் மீது கட்டிடம்
கட்டியவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்யத்
தவறி விட்டார்கள். அதாவது, மழை வெள்ளக்  காலங்களில்
வரும் உபரி நீரை வெளியேற்றக் கூடிய போக்குக்
கால்வாய்களைக் கட்டத் தவறி விட்டார்கள். உபரி நீருக்கு
வெளியேறும் வழி (OUTLET) இல்லாத காரணத்தால்,
ஆங்காங்கே நீர் தேங்கி விடுகிறது. இதனால் வீடுகள்
கட்டிடங்கள் சாலைகள் ஆகியவற்றில் நீர் பத்தடி
உயரத்துக்கு, போக வழி தெரியாமல் தேங்கி நிற்கிறது.

இதற்குக் காரணமான கட்டிட அதிபர்கள் (BUILDERS),
இத்தகைய தவறான கட்டுமானத்துக்கு அனுமதி அளித்த
அரசு மற்றும் மாநகராட்சி நகராட்சி அதிகாரிகள்
அனைவரும் குற்றவாளிகளே!
------------------------------------------------------------------------------------------
வின் டிவி விவாதத்தில் நியூட்டன் அறிவியல் மன்றம்
தெரிவித்த கருத்து.( 05.12.2015 இரவு 7 to 8 மணி)
***************************************************************          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக