செவ்வாய், 1 டிசம்பர், 2015

சீமான் ஒரு மலையாளியே!
--------------------------------------------
சீமான் ஒரு மலையாளியே!
(ஆய்வுக் கட்டுரை)
----------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
-------------------------------------------------------------
சேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) என்ற 
நாடகத்தில் செபஸ்டியன் என்ற ஒரு பாத்திரம் வரும்.
செபாஸ்டியன், வயோலா என்ற இருவரும் இரட்டையர்கள்
என்று சேக்ஸ்பியர் சித்தரித்து இருப்பார். செபஸ்டியன் என்ற 
பெயர் லத்தீன் மொழிப்பெயர் ஆகும். மற்றுமொரு பெயரான 
சைமன் என்பது ஹீப்ரூ மொழிப் பெயர் ஆகும்.
**
மலையாள கிறிஸ்துவர்களிடம் மிகப் பெருமளவில் 
புழங்கும் பெயர்கள் செபஸ்டியன் மற்றும் சைமன் ஆகும்.
சேஷாத்ரி, தோத்தாத்ரி என்ற பெயர்களைக் கேட்டவுடனே 
பார்ப்பனர்கள் என்று அடையாளம் காண முடிவது போல,
செபஸ்டியன் என்ற பெயரைக் கேட்டவுடன், இது மலையாளக் 
குடும்பப் பெயர் என்று விவரம் அறிந்தவர்களால் எளிதில் 
உணர முடியும்.
**
நாம் தமிழர் இயக்கத் தலைவர் திரு சீமான் அவர்கள் 
ஒரு மலையாளக் கிறிஸ்துவரே. நாடார் சமூகத்தைச் 
சார்ந்தவர் என்று ஒரு சாதிச் சான்றிதழை அவர் வாங்கி 
வைத்திருக்கக் கூடும். அவர் நாடார் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் அவரின் பூர்விகம் தமிழ்நாடு அல்ல; கேரளமே!
அவரின் முன்னோர்கள் மலையாளிகளே! மலையாள 
மண்ணைத் தம் உழைப்பால் வளப்படுத்திய, உழைப்பாளிச் 
சாதியான சாணார் சாதியைச் சேர்ந்த மலையாளிகளே 
சீமானின் முன்னோர்கள்! இது வரலாற்று உண்மை!
**
இதைப் புரிந்து கொள்ள, பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலத்தில் 
திருவாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதிக் கொடுமையைப் 
பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்கள் 1956 நவம்பரில்தான் 
உருவானவை. குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் ஆகிய பகுதிகள் திருவாங்கூர் 
சமஸ்தானத்தின் பகுதிகளாக இருந்தன. சாதிக் கொடுமை 
தலை விரித்து ஆடியது.
**
பனையேறும் தொழில் புரியும் சாணார் சாதிப் பெண்கள் 
மார்பை மூடத் துணி அணிய முடியாத நிலை இருந்தது.
ஆண்களின் மீசைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி 
என்று சாணார், புலையர் சாதியினர் மீது "தலை இறை"
என்ற பெயரில் வரி என்று வரிக்கொடுமை உச்சத்தில் 
இருந்தது. கிறிஸ்துவ மிஷனரிகள் ஒடுக்கப்பட்ட சாதி 
மக்களை கிறிஸ்துவத்தில் ஈர்த்தன. இருப்பினும் சாதிக் 
கொடுமை ஒழியவில்லை.
**
வரிக்கொடுமையும் சாதிக் கொடுமையும் தாங்க முடியாமல் 
சாணார் சாதியினர் பலர் குடும்பம் குடும்பமாகத் தமிழ்நாட்டுப் 
பகுதிகளுக்கு, இன்றைய தென் மாவட்டங்களுக்கு, வந்தனர். 
அப்படி வந்தவர்களை  CSI நிறுவனத்தின் பாதிரியார்கள்  
ஆதரித்தனர். CSI என்பது CHURCH OF SOUTH INDIA என்று 
பொருள்படும். சாணார் என்பது சாண் நீளம் உள்ள பனை நாரைப் 
பயன்படுத்தி பனைமரம் ஏறும் தொழிலாளர்களைக் குறித்த  
வினையால் அணையும் பெயர் ஆகும்.
**
இவ்வாறு தமிழ்ப் பகுதிகளுக்கு வந்தவர்கள்தான் சீமானின் 
முன்னோர்கள். (தமிழ்ப் பகுதிகள் என்று குறிப்பிடக் காரணம்,
அன்று தமிழ்நாடு என்ற மாநிலம் இல்லை என்பதால்).
மலையாளிகளாக அன்று வந்தவர்கள், தமிழ் மக்களுடன் 
இரண்டறக் கலந்து, இன்று தமிழர்களாகவே அறியப்
படுகிறார்கள். 
**     
தமிழகத்தில் உள்ள கிறிஸ்துவர்களில் மிகுதியும் தென் 
மாவட்டங்களிலேயே செறிந்து இருக்கிறார்கள் என்ற உண்மை 
நாம் மேலே கூறியதற்கு நிரூபணம் ஆகும். அன்றைய,
சாதி எதிர்ப்புப் போராளியான முத்துக்குட்டி எழுதிய 
"அகிலத் திரட்டு"என்ற நூலில் சாணாரின் துயரம் பதிவு 
செய்யப் பட்டு உள்ளது.
**
ஆக, சீமான் ஒரு மலையாளியே என்று நிரூபித்து உள்ளோம்.
கேரளத் தோழரான அவரை, சேட்டன் என்று அழைத்து 
மரியாதை செய்வோமாக. சேட்டன் சீமான்! அழகான 
அடைமொழி! எந்தா, சேட்டன், இந்தக் கட்டுரையைத் தமிழில்
எழுதி இருக்கிறேன், அதில் வருத்தம் இல்லையே.
ஞான் மலையாளத்திலெ பறயட்டோ!
*************************************************************   
     
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக